நிலச்சரிவு: தடம் புரண்ட பிலாஸ்பூர்-திருநெல்வேலி விரைவு ரயில்

நிலச்சரிவு: தடம் புரண்ட பிலாஸ்பூர்-திருநெல்வேலி விரைவு ரயில்

கோப்புப்படம்: த இந்து

22 Oct 2026 - 5:27 pm

1 mins read

திருவனந்தபுரம்: கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள பாறைசாலை ரயில் நிலையம் அருகே வியாழக்கிழமை (அக்டோபர் 22) அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக, பிலாஸ்பூர்-திருநெல்வேலி விரைவு ரயிலின் இயந்திரம் தடம் புரண்டது.

அதனால் நெய்யாற்றின்கரை-பாறைசாலை வழித்தடத்தில் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன.

இயந்திரம் இருந்த ரயில் பெட்டி தடம் புரண்டதில் யாருக்கும் காயமில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருவனந்தபுரம் பகுதியில் பெய்து கொண்டிருக்கும் கனமழைக்கு மத்தியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

“நிலச்சரிவைத் தொடர்ந்து, வியாழக்கிழமை அதிகாலை 2.19 மணிக்குப் பிலாஸ்பூர்-திருநெல்வேலி விரைவு ரயில் பாறைசாலை அருகே நிறுத்தப்பட்டது. அந்த இடத்தில் ரயில் நின்ற பிறகு, ரயில் இயந்திரம் தடம் புரண்ட நிலையில் காணப்பட்டது. அனைத்துப் பயணிகளும் ரயில்வே ஊழியர்களும் பாதுகாப்பாக உள்ளனர்,” என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

விரைவு ரயில் நெய்யாற்றின்கரை-பாறைசாலை அருகே நிறுத்தப்பட்டு, அங்கிருந்து திருநெல்வேலி வரையிலான ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது.

பயணிகளை அழைத்துச் செல்வதற்குப் பேருந்துகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டன.

மேலும், ரயிலை இயக்குவதற்காக ஒரு மாற்று இயந்திரம் உடனடியாக ஏற்பாடு செய்யப்பட்டது.

ரயில் சேவைகளை மீண்டும் தொடங்குவதற்காக, சீரமைப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தாம்பரம்- திருவனந்தபுரம் சென்ட்ரல் ஸ்பெஷல், மதுரை- புனலூர் எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி-மங்களூரு சென்ட்ரல் பரசுராம் எக்ஸ்பிரஸ், குருவாயூர்-சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட சில ரயில்களின் சேவைகள் பாதிக்கப்பட்டன.

குறிப்புச் சொற்கள்