சட்டம்-ஒழுங்கு விவகாரம்: விஜய் தீவிர ஆலோசனை; ஒரே நாளில் 36 ரவுடிகள் கைது

சட்டம்-ஒழுங்கு விவகாரம்: விஜய் தீவிர ஆலோசனை; ஒரே நாளில் 36 ரவுடிகள் கைது

கோப்புப் படம்: தினத் தந்தி

10 Nov 2026 - 7:33 pm

1 mins read

சென்னை: தீபாவளி பண்டிகை நாளில் தமிழகத்தில் 11 கொலைகள் நடந்ததை அடுத்து சட்ட ஒழுங்குப் பிரச்சினை தொடர்பாகச் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் ச. ஜோசப் விஜய் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 10) உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

தலைமைச் செயலாளர் சாய் குமார், உள்துறைச் செயலாளர் கார்த்தி, காவல்துறை இயக்குநர் மகேஷ் குமார் அகர்வால், சென்னை மாநகரக் காவல் ஆணையர் அமல்ராஜ் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் அதில் கலந்துகொண்டனர்.

சட்டம்-ஒழுங்கைப் பேணத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் பாரபட்சமின்றி உடனடியாக எடுக்குமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து ரவுடிகள் ஒழிப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சிகள் சாடல்

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாகக் கூறி எதிர்க்கட்சித் தலைவர்கள் கண்டன அறிக்கைகளை வெளியிட்டு அரசைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

திடீரென நடைபெற்ற மோதல்களே அக்கொலைகளுக்குக் காரணம் எனக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 9) சென்னை மாநகரில் ஒரே நாளில் 36 ரவுடிகளைக் காவல்துறையினர் கைதுசெய்தனர்.

முன்னதாக, சென்னை மாவட்டப் பகுதிகளில் 186 குற்றவாளிகள் உட்பட மொத்தம் 222 பேரைப் பிடித்துக் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அவர்களுள் 36 பேர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனர். அனைத்து மாவட்டங்களிலும் குற்றங்களைத் தடுக்கவும் ரவுடிகள் வேட்டையை முடுக்கிவிடவும் உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்