சென்னை: இவ்வாண்டு நடைபெற இருக்கும் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரள சட்டப்பேரவைத் தேர்தல்களை முன்னிட்டு, அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோரிடமிருந்து பெறப்பட்ட விருப்ப மனுக்கள் குறித்த விவரங்களை அக்கட்சி வெளியிட்டுள்ளது.
மொத்தம் 10,175 விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளன.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தங்கள் தொகுதியில் போட்டியிட வேண்டும் என வலியுறுத்தி 2,187 பேர் மனு அளித்துள்ளனர்.
நிர்வாகிகள், தொண்டர்கள் போட்டியிட வாய்ப்புக் கோரி 7,988 மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமைக் கழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் 15ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை இந்த மனுக்கள் பெறப்பட்டன.
மனுத் தாக்கல் செய்ய கட்டணமாக ரூ.15,000 நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
பாஜகவுடன் கூட்டணி அமைத்தாலும் தனித்து ஆட்சி அமைப்பதில் அதிமுக உறுதியாக உள்ளது.

