இந்தியா: ரயில் பயணிகளின் சுமைகளுக்குக் கட்டுப்பாடு

1 mins read
251d38f1-9857-46f7-9afe-e1467461b357
ரயில்களில் அனுமதிக்கப்பட்ட அளவைத் தாண்டி சுமைகளைக் கொண்டுவர இனி கட்டணம் வசூலிக்கப்படும். - கோப்புப் படம்: ஊடகம்

புதுடெல்லி: இந்தியாவில் விமானத்தைப் போலவே ரயிலில் பயணம் செய்யும் அனைவருக்கும் சுமை கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ளது.

விமானப் பயணிகள் குறிப்பிட்ட எடைக்குமேல் சுமைகள் கொண்டுவர கட்டணம் வசூலிக்கப்படுவதுபோல் ரயில் பயணி​களிட​மும் வசூலிக்கத் திட்​ட​மிடப்​பட்டு வரு​கிறது.

இந்தியா ​முழு​வ​தி​லும் ரயில்​களில் செல்​லும் பலர் அதிகச் சுமை​களை எடுத்​துச் செல்​வது வழக்​கம். இதில், அவர்​கள் உடைமை​கள் தவிர மற்ற வீட்டு உபயோகப் பொருள்கள், வர்த்தகம் செய்வதற்குத் தேவையான பொருள்கள் உள்ளிட்டவை அடங்கும்.

தற்​போது வீட்டு உபயோகப் பொருள்​களைத் தவிர்த்து வியா​பாரப் பொருள்களுக்கு மட்​டும் கட்​ட​ணம் விதிக்​கப்​படு​கிறது.

இதற்​காக நாட்​டின் அனைத்து ரயில் நிலைய நுழை​வா​யில்​களி​லும் மின்​னணு எடை இயந்​திரங்​கள் வைக்​கப்பட உள்​ளன.

இவற்​றில் எடை போடப்பட்ட பிறகே சுமை​கள் ரயில் தளமேடை உள்ளே அனு​ம​திக்​கப்படும். ரயில்​களில் முன்​ப​திவு இல்​லாப் பொதுப் பெட்​டிகளில் செல்​லும் பயணி​களுக்குத் தலா 35 கிலோ சுமை கொண்டுவர அனு​ம​தி வழங்கப்படும்.

ரயில்​களின் அனைத்து வகைப் பெட்​டிகளி​லும் சுமை​களை வைப்​ப​தற்​காகத் தனி இடவச​தி​யும் செய்​யப்படவுள்​ளது.

ஓடும் ரயில்​களில் பயணச்​சீட்டுப் பரிசோதனை மேற்கொள்வதுபோல், சுமை​களின் எடையும் தோராய​மாகச் சோதிக்​க​ப்படும்.

இந்தப் புதிய மாற்​றம் சோதனை அடிப்​படை​யில் உத்​தரப் பிரதேச மாநிலத்தின் பிர​யாக்​ராஜ் ரயில் நிலை​யங்​களில் அறி​முகப்​படுத்​தப்பட உள்​ளது.

குறிப்புச் சொற்கள்