புதுடெல்லி: ஒரே நேரத்தில் தெற்கு குஜராத், மேற்கு வங்கம் என இரு பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகி இருப்பதாக இந்திய வானிலை நிலையம் தெரிவித்துள்ளது.
குஜராத் அருகே உருவான காற்ழுத்தத் தாழ்வுப் பகுதியானது, அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு - வடமேற்கில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மையமாக வலுவடையும் என்று வானிலை நிலையம் கணித்துள்ளது.
இதேபோல், மேற்கு வங்கம் அருகே உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, மேற்கு-வடமேற்குத் திசை நோக்கி நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மையமாக வலுவடையும் என்றும் அது வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இதற்கிடையே, நீலகிரி, வால்பாறை தொகுதியில் பலத்த மழை பெய்துள்ளது. குறிப்பாக, தமிழகத்தின் சிரபுஞ்சி என்றழைக்கப்படும் சின்னக்கல்லாரில் 12 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கிறது.
பைக்காரா அணையின் நீர்மட்டம், அதன் கொள்ளளவான நூறு அடியில், தற்போது 90 அடியைக் கடந்துவிட்டது.
நீலகிரி மாவட்டத்துக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், அங்கு அவலாஞ்சி பகுதியில் திங்கட்கிழமை (ஜூ 16) வரை, 29.2 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
வால்பாறையில் கடந்த மே மாத இறுதியில் இருந்து பெய்துவரும் தென் மேற்குப்பருவ மழையால் அங்குள்ள அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.
தொடர்ந்து பெய்வரும் கனமழையால் வால்பாறை பகுதி முழுவதும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
160 அடி உயரமுள்ள சோலையாறு அணையின் நீர்மட்டம் திங்கட்கிழமை காலை நிலவரப்படி, நூறு அடியாக இருந்தது.

