விமானத்தில் புகைத்த பயணிமீது வழக்குப்பதிவு

விமானத்தில் புகைத்த பயணிமீது வழக்குப்பதிவு

1 mins read
05395cb8-25a4-45b0-aeb2-df17ad32a1f0
மாதிரிப்படம்: - பிக்சாபே

மும்பை: ஜெய்ப்பூர் - மும்பை இடையிலான ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்தபோது புகைபிடித்த ஆடவர்மீது மும்பைக் காவல்துறை வழக்கு பதிந்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த அர்ஜூன் ராம் தாலோரே, 34, என்ற அந்த ஆடவர் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

கடந்த சனிக்கிழமையன்று (மே 25) இச்சம்பவம் நிகழ்ந்தது.

விமானப் பயணத்தின்போது விமானத்தின் பின்புறக் கழிவறையில் அவர் புகைபிடித்ததாகக் கூறப்பட்டது. இதனால் விமானத்தில் எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டதாகக் கூறப்பட்டது.

உடனே விரைந்த விமானச் சிப்பந்தி, கழிவறைக் கதவைத் தட்டியதாகவும் பின்னர் வெளியிலிருந்து திறந்ததாகவும் கூறப்பட்டது. விமானச் சிப்பந்தியைக் கண்டதும், அர்ஜூன் கழிவறையைவிட்டு வெளியேறி, தமது இருக்கைக்குச் சென்று அமர்ந்துகொண்டார்.

விமானம் தரையிறங்கியதும் அர்ஜூன் ஏர் இந்தியா பாதுகாவல் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டார். பின்னர் அவர், மும்பையின் சகார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, அவர்மீது இரு பிரிவுகளின்கீழ் வழக்கு பதியப்பட்டது.

குறிப்புச் சொற்கள்