எட்டு வயதுச் சிறுமியைச் சீரழித்தவனுக்கு 104 ஆண்டுச் சிறை

எட்டு வயதுச் சிறுமியைச் சீரழித்தவனுக்கு 104 ஆண்டுச் சிறை

படங்கள்: இந்திய ஊடகம்

17 Oct 2023 - 1:07 pm

1 mins read

பத்தனம்திட்டா: பத்து வயதுகூட நிரம்பாத சிறுமியைப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய ஆடவர்க்கு விரைவு நீதிமன்றம் 104 ஆண்டுக் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.

இந்தியாவின் கேரள மாநிலம், பத்தனபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வினோத், 32. எட்டு வயதுச் சிறுமியைச் சீரழித்ததால் அடூர் காவல் நிலையம் இவர்மீது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றத் தடுப்புச் (போக்சோ) சட்டத்தின்கீழ் வழக்கு பதிந்தது.

இதனையடுத்து, இவ்வழக்கில் விரைவு நீதிமன்றம் திங்கட்கிழமை தீர்ப்பு வழங்கியது.

காவல்துறைத் தகவலின்படி, வினோத் அந்த எட்டு வயதுச் சிறுமியைத் தன் வீட்டிற்கு வரவழைத்து, அவளிடம் தகாத படங்களைக் காட்டி, அவளை வன்கொடுமைக்கு ஆளாக்கியதாகச் சொல்லப்படுகிறது.

முன்னதாக, அச்சிறுமியின் மூன்று வயதுத் தங்கையையும் அவன் சீரழித்ததால் வினோத்துக்கு நீதிமன்றம் 100 ஆண்டுச் சிறைத்தண்டனை விதித்தது.

இரண்டாம் வகுப்பு படித்தபோது தனக்கு நடந்த கொடுமை குறித்து அந்த எட்டு வயதுச் சிறுமி தன் தாயிடம் கூறியதை அடுத்து, வினோத்தின் குற்றங்கள் வெளிச்சத்திற்கு வந்தன.

அதனைத் தொடர்ந்து, அச்சிறுமியின் குடும்பத்தின் அடூர் காவல்துறையை நாட, வினோத்மீது இரண்டு வழக்குகள் பதிவாயின.

குறிப்புச் சொற்கள்