சைவ, அசைவப் பொருள்களுக்கு குறியீடு கட்டாயம்: இந்திய அரசு உத்தரவு

சைவ, அசைவப் பொருள்களுக்கு குறியீடு கட்டாயம்: இந்திய அரசு உத்தரவு

படம்: என்டிடிவி

22 Sep 2026 - 7:10 pm

1 mins read

புதுடெல்லி: சோப்பு, ஷாம்பூ உள்ளிட்ட அனைத்து அழகுசாதன, கழிவறைப் பயன்பாட்டுப் பொருள்களிலும் அவை சைவமா அசைவமா என்பதைக் குறிக்கும் வண்ணக் குறியீடுகளை அச்சிடுவது இனி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக இந்திய நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சு புதிய சட்ட விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.

சட்ட அளவீட்டு விதிகளில் திருத்தங்களை மேற்கொண்டு இந்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்புதிய விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.

தாவர அடிப்படையிலான பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட தயாரிப்புகளின், உறையின் முகப்பில் பச்சை நிறப் புள்ளி இடம்பெற வேண்டும்.

அதேபோல், விலங்குசார் கூட்டுப்பொருள்கள் அல்லது கொழுப்புகள் பயன்படுத்தப்பட்ட தயாரிப்புகளுக்குச் சிவப்பு அல்லது பழுப்பு நிறப் புள்ளி இடம்பெற வேண்டும்.

இந்தப் புதிய குறியீட்டு முறையின் மூலம், நுகர்வோர் தாங்கள் வாங்கும் அத்தியாவசியப் பொருள்களின் தன்மையை எளிதில் அறிந்து, தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப தேர்வு செய்ய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்
மத்திய அரசுகுறியீடுவிதிமுறை