இந்தியா, பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம்: சீனா புதுத்தகவல்

1 mins read
7bda16f7-e37a-413b-83eb-b7b55ed14dbf
ஜெய்சங்கர், வாங் யீ. - படம்: தினமணி

புதுடெல்லி: இந்தியா, பாகிஸ்தான் இடையேயான மோதலை முடிவுக்குக் கொண்டுவர மத்தியஸ்தம் செய்ததாக சீனா அறிவித்துள்ளது.

சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற்ற அனைத்துலகக் கருத்தரங்கில் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் வாங் யீ கலந்து கொண்டார். அப்போது, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே சண்டையை நிறுத்த சீனா மத்தியஸ்தம் செய்ததாக அவர் தெரிவித்தார்.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு இதுவரை இல்லாத அளவிலான போர்களும் எல்லை தாண்டிய மோதல்களும் கடந்த 2025ஆம் ஆண்டு நடைபெற்றதாக அவர் குறிப்பிட்டார்.

“புவிசார் அரசியல் பங்களிப்பு நீடித்தது. எனவே அமைதியை நிலைநாட்ட நியாயமான நிலைப்பாட்டை எடுக்க சீனா பிரச்சினைகளுக்கான மூலக் காரணங்களைக் கையாள்வதில் கவனம் செலுத்தியது,” என்றார் வாங் யீ.

அந்த வகையில் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான அணுகுமுறையைப் பின்பற்றி வடக்கு மியன்மார், ஈரானிய அணுசக்திப் பிரச்சினை, பாகிஸ்தான்-இந்தியா இடையேயான மோதல், பாலஸ்தீனம்-இஸ்ரேல் போர், கம்போடியா-தாய்லாந்து மோதல் ஆகிய விவகாரங்களில் சீனா மத்தியஸ்தம் செய்தது என்றார் வாங் யீ.

ஆனால் இத்தகைய தலையீடுகள் இருந்தும் இல்லை என்று இந்திய வெளியுறவு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சீன வெளியுறவு அமைச்சரின் கருத்து குறித்து, இந்திய வெளியுறவு அமைச்சு தனது அதிகாரபூர்வ விளக்கத்தை விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்