மும்பை: மும்பையின் செம்பூர் பகுதியில் கட்டப்பட்டு வரும் மெட்ரோ தூண் அங்குள்ள குடியிருப்புப் பகுதியில் இடிந்து விழுந்தது.
அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயங்களோ உயிரிழப்போ ஏற்படவில்லை என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகத் தகவல் தெரிவித்துள்ளது.
வியாழக்கிழமை இரவு 9.30 மணியளவில் நடந்த இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையின் முக்கியமான போக்குவரத்து பாதையான சியோன்-டிராம்பே சாலைக்குச் செல்லும் சாலையில் இந்த விபத்து நடந்துள்ளது.
மும்பை பெருநகரப் பகுதி மேம்பாட்டு ஆணையத்தின் (எம்எம்ஆர்டிஏ) செய்தித் தொடர்பாளர் கூறுகையில், இந்தச் சம்பவம் குறித்து இரண்டு நாட்களுக்குள் நிறுவனம் முழுமையாக விசாரணை நடத்தும் என்றார்.
எனினும், இந்த விபத்து தற்போது நடைபெற்று வரும் மெட்ரோ பணியின் உறுதித் தன்மை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

