தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகு அம்மாநிலத் லைநகர் ஐஸ்வால் ரயில் போக்குவரத்துடன் இணைக்கப்பட்டுள்ளது

மிசோரம்: ரூ.8,000 கோடியில் ரயில் பாதை

2 mins read
8cfab7dc-e1d1-45bf-b6bd-d95f5119baef
ரூ.8,071 கோடி செலவில் பைராபி முதல் சாய்ராங் வரை 51.38 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரயில் பாதை அமைக்கப்பட்டு மிசோரம் மாநிலத் தலைநகர் ஐஸ்வால் உடன் இணைக்கப்பட்டுள்ளது. - படம்: இந்திய ஊடகம்

ஐஸ்வால்: இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோரமில் முதல் முறையாக ரயில் போக்குவரத்து வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ரூ.8,071 கோடி செலவில் உருவான இந்தப்பாதை ஐஸ்வாலை அசாமின் சில்சார் நகரத்துடனும், நாட்டின் பிற பகுதிகளுடனும் இணைக்கும். இந்த ரயில் நிலையத்தை வரும் 13ஆம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.

அசாம் மாநிலம் சில்சாரில் இருந்து அம்மாநிலத்தின் ஒரு பகுதியான பைராபி வரையிலான ரயில் போக்குவரத்து 2016ல் தொடங்கப்பட்டது. தற்போது பைராபி முதல் சாய்ராங் வரை 51.38 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரயில் பாதை அமைக்கப்பட்டு தலைநகர் ஐஸ்வால் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் சாய்ராங் ரயில்நிலையம் உலகத் தரத்தில் மேம்படுத்தப்பட்டுள்ளது.

இந்த இரண்டு நகரங்களுக்கு இடையில் சாலை வழிப் பயணம் என்பது கிட்டத்தட்ட 10 மணி நேரம்வரை ஆகும். ஆனால், புதிய ரயில் பாதை வழி ஒன்றரை மணி நேரத்தில் சென்றுவிடலாம்.

இப்பாதையில், 5 ரயில் நிலையங்கள், 12.48 கிலோமீட்டர் நீளமுள்ள மலைகளைக் குடைந்து 48 சுரங்கப்பாதைகள், 55 உயரமான பாலங்கள், 87 சிறிய பாலங்கள், 5 சாலை மேம்பாலங்கள், 48 சுரங்கப் பாதைகள் அமைந்துள்ளன. இதற்காக 12.48 கிலோமீட்டர் நீளமுள்ள மலைகள் குடையப்பட்டன. 2016ல் தொடங்கப்பட்ட கட்டுமானப் பணி கடந்த 9 ஆண்டுகளாக நடைபெற்றது. காடும் மலைகளும் நிறைந்த பகுதி என்பதால் ஆண்டிற்கு நான்கு மாதங்கள் மட்டுமே பணிகள் நடைபெற்றன.

காடும் மலைகளும் நிறைந்த பகுதி என்பதால் ஆண்டிற்கு நான்கு மாதங்கள் மட்டுமே பணிகள் நடைபெற்றன.
காடும் மலைகளும் நிறைந்த பகுதி என்பதால் ஆண்டிற்கு நான்கு மாதங்கள் மட்டுமே பணிகள் நடைபெற்றன. - படம்: இந்திய ஊடகம்

அம்மாநிலத்தின் மொத்த நிலப்பரப்பில் 91 விழுக்காடு காடுகள்தான். அதனால் அங்கு ரயில் பாதை அமைப்பது பெரிய சவாலாக இருந்தது. இதனால் இந்தியாவிலேயே மிகவும் குறைந்த அளவிலான ரயில் பாதையைக் கொண்ட மாநிலமாக மிசோரம் இருந்தது.

இந்தத் திட்டத்தின்கீழ் பணிபுரிந்த பல்வேறு ஒப்பந்த நிறுவனங்களில் தமிழகத்தைச் சேர்ந்த தொழில்நுட்பப் பொறியாளர்களும் வேலை செய்துள்ளனர். குறிப்பாகச் சவால் நிறைந்த பகுதிகளில் திட்டம் வகுத்துக் கொடுத்து வெற்றிகரமாக முன்னேறிச் செல்வதற்கு உறுதுணையாக இருந்திருக்கின்றனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

மிசோரம் புதிய ரயில் பாதை திட்டத்திற்கு கரடு முரடான பகுதிகளில் சாலை அமைத்து, அதன் வழியாகப் பொருள்கள் கொண்டு செல்லப்பட்டன. கிட்டத்தட்ட 200 கிலோமீட்டர் தூரத்திற்கு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தச் சாலைகள் மிசோரம் கிராமப் பகுதிகளுக்குச் செல்லும் வகையில் புதிய வழித்தடமாக இருக்கும். எனவே ரயில் பாதை திட்டத்திற்காக அமைக்கப்பட்ட சாலைகள், பொதுப் போக்குவரத்திற்குப் பயன்படுத்தும் வகையில் மாற்றப்படவுள்ளது கூடுதல் சிறப்பாகப் பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்