ரூ.7,500 கோடியில் பகுதி மின்கடத்தி ஆலையைத் திறந்துவைத்த பிரதமர் மோடி

ரூ.7,500 கோடியில் பகுதி மின்கடத்தி ஆலையைத் திறந்துவைத்த பிரதமர் மோடி

2 mins read
3e587737-a191-4179-a4ad-3e07f9bae359
புதிய மின்கடத்தி ஆலை, இந்தியாவின் மாபெரும் மின்னணுப் புரட்சியின் அடுத்த கட்டம் என்றார் திரு மோடி. - படம்: பிஸ்னஸ் டுடே

அலகாபாத்: குஜராத்தின் சனந்த் பகுதியில் உள்ள சில்லு உற்பத்தி ஆலை, உள்நாட்டுச் சில்லு உற்பத்திச் சூழலமைப்பை வலுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் தொழில்நுட்பத் தன்னிறைவை மேம்படுத்தும் என்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மேலும், அது உலகளாவிய பகுதி மின்கடத்தி மதிப்புச் சங்கிலியில் இந்தியாவின் நிலையை உயர்த்தும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குஜராத் மாநிலத்தில் உள்ள சனந்த் பகுதி மின்கடத்தி ஆலையை சனிக்கிழமை (ஜூலை 4) பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், அந்த அதிநவீன ஆலை, இந்தியாவின் மாபெரும் மின்னணுப் புரட்சியின் அடுத்த கட்டம் என்றார்.

இதன்மூலம், உலகின் இரண்டாவது ஆகப்பெரிய கைப்பேசி உற்பத்தியாளராக இந்தியா நிலைநிறுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

வளர்ந்துவரும் உலகளாவிய பகுதி மின்கடத்தி மையமாக புதிய ஆலை உருவெடுக்கும் என்று நம்பிக்கை தெரிவித்த பிரதமர் மோடி, இது ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் இரண்டாம் கட்டம் என்றார்.

உலகளாவிய மின்னிலக்கப் பொருளியலுக்கு வலுசேர்க்கும் வகையில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பொறியாளர்களும் நிபுணர்களும் சனந்த் ஆலையில் ஒரே கூரையின்கீழ் பணியாற்றுவதாகக் குறிப்பிட்ட அவர், அந்த ஆலை வளாகத்தை ஒரு ‘மினி இந்தியா’ என்று வர்ணித்தார்.

இந்திய இளையர்களுக்குச் செயற்கை நுண்ணறிவு, அடுத்த தலைமுறைத் தொழில்நுட்பங்களில் முன்னேறிச் செல்ல தற்போது உருவாக்கப்படும் புதிய சூழலமைப்பு நிச்சயம் பல வாய்ப்புகளை வழங்கும் என்றார் பிரதமர் மோடி.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

சனந்த் ஆலை ஆண்டுக்கு 20 கோடி சில்லுகளை உற்பத்தி செய்யும் திறன்கொண்டது என்று குறிப்பிட்ட அவர், அந்த எண்ணிக்கையை ஆண்டுக்கு 500 கோடி சில்லுகள் என்று அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார்.

ரூ.7,500 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆலை, இந்தியாவின் மூன்றாவது ஆகப்பெரிய பகுதி மின்கடத்தி உற்பத்திப் பிரிவைக் கொண்டுள்ளது.

இந்தியாவின் தற்சார்பு நோக்கிய பயணத்தில் முக்கியமான மைல் கல்லாக இந்த ஆலை விளங்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனிடையே, ராஜஸ்தான் மாநிலத்தில் புதிய கச்சா எண்​ணெய் சுத்​தி​கரிப்பு ஆலை​யைப் பிரதமர் நரேந்​திர மோடி சனிக்கிழமை (ஜூலை 4) திறந்து வைத்​தார்.

அப்​போது பேசி​ய அவர், மத்திய கிழக்குப் போர் காரண​மாக வீட்டு உபயோகச் சமையல் எரிவாயு உருளை விலை ரூ.2,000 வரை உயரும் அபா​யம் எழுந்​தது என்றார்.

“எனினும், இந்​திய அரசின் சிறப்பான நடவடிக்கைளால் விலை உயர​வில்​லை. எந்​தவொரு சவாலை​யும் எதிர்​கொள்​ளும் திறன் இந்​தி​யா​வுக்கு உள்​ளது,” என்றார் பிரதமர் மோடி.

குறிப்புச் சொற்கள்