சோமநாதர் கோயிலின் 75ஆம் ஆண்டு நிறைவு விழாவில் பங்கேற்கிறார் மோடி

கோயிலின் 90 மீட்டர் உயரமுள்ள சிகரத்தில் முதன்முறையாக அமுதப் பெருவிழா

சோமநாதர் கோயிலின் 75ஆம் ஆண்டு நிறைவு விழாவில் பங்கேற்கிறார் மோடி

1 mins read
42e7eedf-a694-40da-bba4-17e670a5cebc
குஜராத்தில் உள்ள சோமநாதர் கோயில். - படம்: என்டிடிவி

காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் திங்கட்கிழமை (மே 11) நடைபெறவுள்ள சோமநாதர் கோயிலின் 75ஆம் ஆண்டு நிறைவு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவிருக்கிறார்.

புகழ்பெற்ற 12 ஜோதிர்லிங்கத் திருத்தலங்களில் முதன்மையானது சோம்நாத் கோயில். அது வெராவல் பகுதியில் அமைந்துள்ளது.

மறுசீரமைக்கப்பட்ட கோயிலின் உச்சியில் முதன்முறையாக அமுதப் பெருவிழா நடைபெறவிருக்கிறது.

நவீன வரலாற்றில் முதன்முறையாக 90 மீட்டர் உயரம் கொண்ட சிகரத்தில், நாட்டின் பல பகுதிகளைச் சேர்ந்த 11 புனிதத்தலங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரைக் கொண்டு திருக்குட நன்னீராட்டு விழா நடத்தப்படும்.

90 மீட்டர் உயரம் கொண்ட சிறப்புப் பாரந்தூக்கியின் உதவியோடு புனித நீர் நிரம்பிய பெரிய கும்பம், கோயிலின் உச்சிக்குக் கொண்டுசெல்லப்படும்.

வேத மந்திரங்கள் ஒலிக்க, திருக்குட நன்னீராட்டு விழா நடைபெறவுள்ளது. குடமுழக்கு முடிந்த பிறகு, கோயிலின் உச்சியில் கொடியேற்றப்படும்.

விழாவை ஒட்டிய மற்ற சமய, கலாசார நிகழ்வுகளிலும் சிறப்புப் பூசையிலும் பிரதமர் மோடி கலந்துகொள்வார் என்று தெரிவிக்கப்பட்டது.

சோமநாதர் ஆலயத்தின் வளமான பாரம்பரியத்தையும் ஆன்மிகச் சிறப்புகளையும் போற்றும் வகையில் சிறப்பு அஞ்சல் தலையொன்றையும் நாணயத்தையும் திரு மோடி வெளியிடவிருக்கிறார்.

அதன் பிறகு வதோதரா நகருக்குச் செல்லும் அவர், ‘சர்தார்தாம் விடுதி’யைத் திறந்துவைக்கவுள்ளார். அங்கு, ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர் தங்கும் விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்