அமெரிக்கா குறித்துப் பேச மறுக்கும் மோடி: ராகுல் விமர்சனம்

அமெரிக்கா குறித்துப் பேச மறுக்கும் மோடி: ராகுல் விமர்சனம்

1 mins read
0620e084-d187-4114-9fe9-1ebb4c46fde1
குஜராத்தில் வதோதராவில் நடந்த பழங்குடியினர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் ராகுல் காந்தி கலந்துகொண்டார். - படம்: தேஷ் குஜராத்

மும்பை: மத்திய கிழக்குப் போர் குறித்து இந்திய நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்காவைப் பற்றி ஒரு வார்த்தைகூட குறிப்பிடவில்லை என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சுட்டிக்காட்டி உள்ளார்.

இந்தியப் பிரதமர் தற்போது அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் ராகுல் விமர்சித்துள்ளார்.

குஜராத்தில் வதோதராவில் நடந்த பழங்குடியினர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், “நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி 25 நிமிடங்கள் பேசினார். ஆனால் அமெரிக்காவிற்கு எதிராக ஒரு வார்த்தைகூட சொல்லவில்லை. மோடி நூறு விழுக்காடு டிரம்ப்பின் கட்டுப்பாட்டில் இருக்கிறார்,” என்றார்.

மோடி நாடாளுமன்ற விவாதங்களில் பங்கேற்கத் தயங்குவதாகக் குறிப்பிட்ட அவர், பிரதமர் ஒரு சமரசம் செய்யப்பட்ட நிலையில் உள்ளதாக விமர்சித்தார்.

அமெரிக்காவுடன் மேற்கொள்ளப்படும் வர்த்தக ஒப்பந்தங்கள் இந்திய விவசாயிகளை அழித்துவிடும் என்றார் ராகுல் காந்தி.

“அமெரிக்காவில் இயந்திரங்கள் மூலம் பெரிய பண்ணைகளில் விவசாயம் நடக்கிறது. இந்தியாவில் சிறு நிலங்களில் மனித உழைப்பால் விவசாயம் நடக்கிறது.

“அமெரிக்கப் பொருள்கள் இந்தியாவிற்குள் தாராளமாக வந்தால், நம் விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழப்பார்கள்,” என்றார் ராகுல் காந்தி.

குறிப்புச் சொற்கள்