மோடி 43 வெளிநாட்டுப் பயணங்கள்: 5 ஆண்டுகளில் ரூ.462 கோடி செலவு

மோடி 43 வெளிநாட்டுப் பயணங்கள்: 5 ஆண்டுகளில் ரூ.462 கோடி செலவு

கோப்புப்படம்: என்டிடிவி

12 Feb 2026 - 9:32 pm

1 mins read

புதுடெல்லி: கடந்த ஐந்து ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி 43 வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருப்பதாகவும் அதற்காக ரூ.462.58 கோடி செலவானதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அமெரிக்கா, ஐக்கிய அரபு சிற்றரசு, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு நான்கு முறை பயணம் மேற்கொண்டுள்ளார்.

அதேபோல் பிரான்ஸ் நாட்டுக்கு மூன்று முறையும் பிரிட்டன், தென் ஆப்பிரிக்கா, ரஷ்யா, பிரேசில் நாடுகளுக்கு தலா இரண்டு முறையும் அரசுமுறைப் பயணமாக அவர் சென்றுள்ளார்.

பிப்ரவரி 7, 8ஆம் தேதிகளில் மலேசியாவுக்குச் சென்று திரும்பியதே அவரது அண்மைய வெளிநாட்டுப் பயணமாகும்.

கடந்த ஆண்டு இந்தியப் பிரதமர் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்களில் பிரான்ஸ் நாட்டுக்குச் சென்றதுதான் அதிக செலவை ஏற்படுத்திய பயணமாகும்.

ஏஐ மாநாடு, பிரான்ஸ் அதிபரின் இரவு விருந்து, முன்னணி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளின் கூட்டம் ஆகியவற்றில் திரு மோடி பங்கேற்றார்.

அமெரிக்கப் பயணத்துக்காகச் செலவிடப்பட்ட ரூ.22.8 கோடி அதிக செலவுகள் ஏற்படுத்திய பயணப் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது.

இந்தப் பயணங்களுக்கான மொத்த செலவு ரூ.462.58 கோடி.

இதில் அமெரிக்கப் பயணத்துக்காக 16%, பிரான்ஸ், ஜப்பான் பயணங்களுக்காக 9% செலவானதாக இந்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
பிரதமர்நரேந்திர மோடிவெளிநாடுபயணம்பிரான்ஸ்மலேசியாஅமெரிக்காஜப்பான்ஐக்கிய அரபு சிற்றரசுகள்ரஷ்யாஆப்பிரிக்காபிரிட்டன்பிரேசில்செலவு