வெளிநாடு வாழ் இந்தியர்கள்தாயகத்துக்கு அனுப்பும் பணம் குறையவில்லை: மத்திய வங்கி

வெளிநாடு வாழ் இந்தியர்கள்தாயகத்துக்கு அனுப்பும் பணம் குறையவில்லை: மத்திய வங்கி

1 mins read
184594ea-2885-4e7f-afb6-199d1f5feb8f
வளைகுடா நாடுகளில் பதற்றமான சூழ்நிலை நிலவினாலும் அங்கிருந்து இந்தியர்கள் அனுப்பும் பணம் குறையவில்லை. - கோப்புப் படம்: இந்துஸ்தான் டைம்ஸ்

புதுடெல்லி: வெளி​நாடு​களில் பணி​யாற்​றும் இந்​தி​யர்​கள், தாய்​நாட்​டுக்கு அனுப்​பும் பணம் குறையவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்​பாக வளை​குடா நாடு​களில் இருந்து இந்​தி​யர்​கள் அனுப்​பும் பணத்​தின் பங்​களிப்பு 38 விழுக்காடாக உள்​ளது.

அமெரிக்​கா, ஈரான் இடையி​லான போரால் ஒட்​டுமொத்த வளை​குடா நாடு​களும் பாதிக்​கப்​பட்டு உள்​ளன. இதனால் அந்த நாடு​களில் இருந்து இந்​தி​யர்​கள் அனுப்​பும் பணம் கணிச​மாகக் குறையும் என்று தகவல்​கள் வெளி​யாகி வரு​கின்​றன.

இதுதொடர்​பாக பேசிய ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் பூனம் குப்தா, கடந்த மார்ச் மாதத்​தில் வளை​குடா நாடுகளிலிருந்து இந்​தி​யர்​கள் அனுப்​பிய பணம் வழக்​கத்​தை​விட அதி​க​மாக இருந்தது என்றார்.

இந்தியாவின் பொருளாதாரம் சிறப்பாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

“கொரோனா பெருந்​தொற்று காலத்​தையே வெற்​றிகர​மாக கடந்து வந்​து​விட்​டோம். ஈரான் போரால் ஏற்​பட்​டிருக்​கும் நெருக்​கடிகளை​யும் வெற்​றிகர​மாக எதிர்​கொள்​ளும் திறன் இந்​தி​யா​வுக்கு உள்​ளது.

“இவ்வாண்டில் இந்​தி​யா​வின் பொருளா​தார வளர்ச்சி 7.5 விழுக்காடாக இருக்கும். பணவீக்​கம் 4 விழுக்காட்டுக்கும் குறை​வாக இருக்​கும்,” என்று மத்திய வங்கியின் ஆளுநர் பூனம் குப்​தா தெரி​வித்தார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்