புதுடெல்லி: அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டோனல்ட் டிரம்ப் திங்கட்கிழமை (ஜனவரி 20) அதிபராகப் பதவியேற்கவுள்ளார்.
டிரம்ப் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள ரிலையன்ஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி, ரிலையன்ஸ் அறக்கட்டளை தலைவரும் முகேஷ் அம்பானியின் மனைவியுமான நீத்தா அம்பானி ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. டிரம்ப்பின் அழைப்பை ஏற்று பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக முகேஷ் அம்பானி - நீத்தா அம்பானி தம்பதி ஜனவரி 19ஆம் தேதி வாஷிங்டன் செல்கின்றனர்.
பதவியேற்பு விழாவைத் தொடர்ந்து நடைபெறும் அமைச்சரவை வரவேற்பு நிகழ்ச்சி, துணை அதிபர் ஜேடி வேன்ஸ் அளிக்கும் விருந்து ஆகியவற்றில் இருவரும் கலந்து கொள்கின்றனர். முன்னதாக, பதவியேற்பு விழாவுக்குமுன் அதிபர் டோனல்ட் டிரம்ப் அளிக்கும் இரவு விருந்திலும் இருவரும் கலந்து கொள்கின்றனர்.
அதனைத் தொடர்ந்து துணை அதிபர் ஜேடி வேன்ஸ், அவரது மனைவி உஷா வேன்ஸ் ஆகியோரை அம்பானி தம்பதி சந்திக்கின்றனர்.

