மும்பை: மும்பையில் உள்ள 14 மாடிக் கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் புதன்கிழமை காலை 3 பேர் உயிரிழந்தனர்.
மும்பை அந்தேரி பகுதியில் உள்ள ரியா பேலஸ் என்ற அடுக்குமாடி குடியிருப்பின் 10வது மாடியில் உள்ள வீட்டில், புதன்கிழமை காலை 8 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தீயணைப்புத் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்த வீரர்கள், ஒரு மணிநேரப் போராட்டத்துக்குப் பிறகு தீயை அணைத்தனர்.
இந்த விபத்தில், படுகாயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனளிக்காமல் அவர்கள் உயிரிழந்ததாக மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
மேலும், தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து தீயணைப்புத் துறையும் காவல்துறையும் விசாரணை நடத்தி வருகின்றன.


