இந்தி நடிகர்களுக்கு மும்பை காவல்துறை பாதுகாப்பு எச்சரிக்கை

இந்தி நடிகர்களுக்கு மும்பை காவல்துறை பாதுகாப்பு எச்சரிக்கை

படம்: ஆர்என்ஏ

07 Nov 2026 - 4:36 pm

1 mins read

மும்பை: இந்தி திரைப்பட நடிகர் டைகர் ஷெராஃப் மீது கடந்த மாதம் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இத்தாக்குதலுக்கு லாரன்ஸ் பிஷ்னோய் தலைமையிலான குண்டர் கும்பல் பொறுப்பேற்றுள்ள நிலையில், மும்பை காவல்துறை பாலிவுட்டின் முக்கிய நடிகர், நடிகைகளுக்குப் பாதுகாப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது.

அத்தாக்குதலில் நடிகர் ஷெராஃப் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினாலும், அவரது வாகன ஓட்டுநர் உட்பட இருவர் காயமடைந்தனர்.

அதையடுத்து, முக்கியப் பிரமுகர்கள், திரைக்கலைஞர்கள் பொது இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் பொதுமக்களின் கோரிக்கைக்கு இணங்க ரசிகர்களுடன் ‘செல்ஃபி’ எடுப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் காவல்துறை திட்டவட்டமாக அறிவுறுத்தியுள்ளது.

கடந்த காலங்களைப் போல் அல்லாமல், எத்தகைய மிரட்டல் அழைப்புகளும் வராமலேயே நடிகர்கள் ரோஹித் ஷெட்டி, டைகர் ஷெராஃப் போன்றோர் குறிவைக்கப்பட்டுள்ளனர்.

அச்சம்பவத்தில் கைதானவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் வேறு எந்தெந்தப் பிரபலங்களின் வீடுகளைக் கண்காணித்தார்கள் என்ற திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன் அடிப்படையில், பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்கள் அனைவரின் பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரமாக மறுஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

முக்கியப் பிரமுகர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் காவல்துறையினர் தொடர் கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்