தூக்கப் பயிற்சியில் ரூ.9.6 லட்சம் வென்ற மும்பைப் பெண்

தூக்கப் பயிற்சியில் ரூ.9.6 லட்சம் வென்ற மும்பைப் பெண்

படம்: வேக்ஃபிட்

10 Nov 2026 - 7:35 pm

1 mins read

மும்பை: இந்தியா முழுவதிலுமிருந்து 10 போட்டியாளர்களை ஒன்றிணைத்து இரண்டு மாதங்களாக நடத்தப்பட்ட ‘வேக்ஃபிட்’ நிறுவனத்தின் ‘ஸ்லீப் இன்டர்ன்ஷிப்’ திட்டத்தின் ஐந்தாவது பருவத்தில் வெற்றியாளராக ஜினியா சாட்டர்ஜி அறிவிக்கப்பட்டார்.

மும்பையைச் சேர்ந்த அவருக்கு ரூ.9.6 லட்சம் பரிசுத் தொகையும் அனைத்துச் செலவுகளையும் உள்ளடக்கிய விடுமுறைச் சுற்றுப்பயணமும் பரிசாகக் கிடைத்துள்ளது.

வேக்ஃபிட்டின் இணையத்தளம், அவரை ஒரு பாடகர், கலைஞர், தொழில்முனைவோர் என்றும் தனது தூங்கும் நேரத்தைக் கண்டிப்புடன் கடைப்பிடிப்பவர் என்றும் விவரிக்கிறது.

இந்தப் பருவத்தில் இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்திருந்த நிலையில், 10 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர். அறுபது நாட்களுக்கு அவர்கள் தங்கள் தூக்கத்தைக் கண்காணித்து, வழக்கமான ஒரு நடைமுறையைப் பின்பற்றி, தரவரிசைப் பட்டியலில் முன்னேற வாராந்திர சவால்களை மேற்கொண்டனர்.

மெத்தை, தூக்கம் சார்ந்த தயாரிப்புகளை வழங்கும் நிறுவனமான ‘வேக்ஃபிட்’ போட்டியை நடத்தியது. இரண்டு மாதங்கள் நீடித்த போட்டி நாடு முழுவதிலுமிருந்தும் பங்கேற்பாளர்களை ஈர்த்தது.

குறிப்புச் சொற்கள்