தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்தியா பற்றிய குறைகூறலுக்கு மஸ்க் பதிலடி

2 mins read
1bc0d40b-8d73-46b8-968c-280c20f7ccd7
எக்ஸ் தளத்தில் இந்திய விவகாரம் குறித்து அமெரிக்க உதவியாளர் பீட்டர் நவாரோ, எக்ஸ் தள உரிமையாளர் எலான் மஸ்க் மோதுகின்றனர். - படம்: செயற்கை நுண்ணறிவு

யாரையும் விதிவிலக்கு இல்லாமல் அனைவரது பதிவுகளும் உண்மைக்காகச் சரிபார்க்கப்படும் என்று எக்ஸ் தளத்தின் உரிமையாளரும் பெருஞ்செல்வந்தருமான எலான் மஸ்க் தெரிவித்தார்.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் உதவியாளர் பீட்டர் நவாரோ, எக்ஸ் தளத்தில் இந்தியா பற்றி வெளியிட்ட பதிவு ஒன்றுக்கு திரு மஸ்க், திரு நவாரோவின் பதிவுக்குத் தமது பதிவில் இந்தியாவுக்குச் சாதகமான பதிவு ஒன்றைப் போட்டிருந்ததை அடுத்து திரு நவாரோ தமது அதிருப்தியை அந்தத் தளத்தில் வெளிப்படுத்தினார்.

அதன் பிறகு ஏற்றிய பதிவில் திரு மஸ்க், திரு நவாரோவுக்கு பதிலளிக்கவோ, அல்லது தமது பதிவில் அவரது பெயரை நேரடியாகக் குறிப்பிடவோ இல்லை.

“இந்தத் தளத்தில், மக்கள் தான் கருத்துகளைத் தீர்மானிக்கிறார்கள். நீங்கள் எல்லோர் கருத்தையும் கேட்கிறீர்கள். சமூகக் குறிப்புகள் அனைவரையும், விதிவிலக்கு இல்லாமல் சரிபார்க்கின்றன... தகவலைச் சரிபார்க்கும் சேவையை கிரோக் (Grok) வழங்குகிறது” என்று திரு மஸ்க்,  எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.

வர்த்தகம், வெளியுறவுக் கொள்கைகள் ஆகியவற்றின் தொடர்பில் இந்தியாவைப் பற்றி கருத்துரைத்து வரும் திரு நவாரோ, ரஷ்ய எண்ணெய் இறக்குமதியால் இந்தியா லாபம் ஈட்டுவதாகப் பதிவு ஒன்றில் குற்றம்சாட்டினார்.

அதன் பின்னர் நவாரோவின் பதிவிலுள்ள தகவல்கள் முரணானவை என்று எக்ஸ் உண்மை சரிபார்ப்பு செய்தது.

இந்தியாவில் உள்ள மிக உயர்ந்த வரிகள் அமெரிக்க வேலைகளை அழிப்பதாகவும்  இந்தியாவுக்குச் செய்யப்படும் எண்ணெய் விற்பனையால் ஏற்படும் லாபத்தை ரஷ்யா போருக்காகப் பயன்படுத்துவதாகவும் திரு நவாரோ சாடினார்.

“இதனால் உக்ரேனியர்கள்/ரஷ்யர்கள் இறக்கின்றனர். இந்தியாவால் உண்மையைச் சமாளிக்க முடியவில்லை/தவறாகப் பேசுகிறது,” என்று திரு நவாரோவின் பதிவு குறிப்பிடுகிறது.

இதற்கு எக்ஸின் சரிபார்ப்புக் குறிப்பில், இந்தியாவின் ரஷ்ய எண்ணெய் கொள்முதல் எரிபொருள் தேவைக்கானது என்றும் அது தடைகளை மீறவில்லை என்றும் சரி எழுதப்பட்டது. 

“நவாரோவின் கூற்று முரண்பாடானது. இந்தியாவின் சட்டப்பூர்வ, ஆற்றல் பாதுகாப்பிற்கான ரஷ்ய எண்ணெய் கொள்முதல் சர்வதேச சட்டத்தை மீறவில்லை” என்று எக்ஸ் குறிப்பிட்டிருந்தது.

இந்தியா மீதான தண்டனை வரிகள் நடைமுறைக்கு வந்த சில மணிநேரங்களுக்குப் பிறகு, ரஷ்யா-உக்ரேன் மோதலை “மோடியின் போர்” என்று திரு நவரோ முத்திரை குத்தினார். மேலும் இந்தியாவின் தொடர்ச்சியான ரஷ்ய எண்ணெய் கொள்முதல், மாஸ்கோவின் ராணுவ நடவடிக்கைகளை மேலும் தூண்டுவதாகக் கூறினார். 

குறிப்புச் சொற்கள்