தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தெலுங்கானாவில் நக்சலைட்டுகள் கைது, பல ஆயுதங்கள் பறிமுதல்

1 mins read
9b1ec372-d4ce-4be0-b778-5d7709f0fa4f
20 நக்சலைட்டுகள் கைது செய்யப்பட்டனர். - படம்: daijiworld.com / இணையம்

ஹைதராபாத்: தெலுங்கானாவில் நக்சலைட்டுகள் 20 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அவர்களிடமிருந்து வெடி மருந்துகள், ஆயுதங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தினமலர் ஊடகம் தெரிவித்துள்ளது.

சத்தீஸ்கர்-தெலுங்கானா எல்லையில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் வந்தது. அதன்படி, தெலுங்கானா மாநிலத்தின் முலுகு மாவட்டத்தில் வாகனச் சோதனைகள், சுற்றுக்காவல் பணிகளில் காவல்துறையினர் ஈடுபட்டனர்.

அப்போது நக்சலைட்டுகள் 20 பேரைக் காவல்துறை கைது செய்தது. நக்சலைட்டுகளிடமிருந்து வெடிமருந்துகளையும் ஆயுதங்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

சத்தீஸ்கர்-தெலுங்கானா எல்லையில் மாவோயிஸ்ட் கோட்டைகளை அகற்றுவதற்காக 21-நாள் ஒருங்கிணைந்து நடத்தப்பட்ட ‘‘ஆப்பரேஷன் பிளாக் பாரஸ்ட்” நடவடிக்கையின் வெற்றிக்குப் பிறகு இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்