திருவனந்தபுரம்: கேரளாவில் மதுபான விற்பனைக்காக புதிய கைப்பேசி செயலியை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
இதனால் வாடிக்கையாளர்கள் இனி மதுக்கடைகள் முன்பு நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை எனக் கேரள மாநில பான நிறுவனமான ‘பெவ்கோ’வின் (BEVCO) நிர்வாக இயக்குநர் ஹர்ஷிதா அட்லூரி கூறியுள்ளார்.
“இனி விருப்பமான பானங்களைத் தேர்வு செய்து இணையம் வழி பணம் செலுத்தினால் அவை வீடு தேடி வரும்,” என்று ‘பெவ்கோ’ வெளியிட்ட அறிவிப்புக்கு மதுப்பிரியர்கள் வரவேற்பும் கேரள எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரம் தற்போது விவாதப் பொருளாக மாறியுள்ளது.