ஐஸ்வால்: இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுக்கு பைராபி-சாய்ராங் ரயில் பாதை ஒரு ‘வரலாற்று மைல்கல்’ என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
மணிப்பூரில் நீண்ட காலமாக நீடித்து வந்த மோதல், கலவரங்கள் முடிவுக்கு வந்ததை அடுத்து, மணிப்பூர், மிசோரம், அசாம் ஆகிய மாநிலங்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார் பிரதமர் மோடி.
செப்டம்பர் 13ஆம் தேதி முதற்கட்டமாக மிசோரம் சென்ற அவர், அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பேசினார். அப்போது மிசோரம் மாநிலத்துக்குப் பல்வேறு திட்டங்களை அறிவித்தார்.
குறிப்பாக, பைராபி-சாய்ராங் பகுதிகளுக்கு இடையேயான ரயில் பாதையை அவர் திறந்து வைத்தார்.
இந்தப் பாதையானது, இந்திய வரலாற்றில் முதல் முறையாக, மிசோரம் தலைநகரான ஐஸ்வாலை இந்திய ரயில்வே வலைப்பின்னலுடன் இணைக்கும் என்றார் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்.
இதுகுறித்து சாய்ராங்கில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 45 சுரங்கப் பாதைகள், 55 பெரிய பாலங்களைக் கொண்டது இந்தத் திட்டம் என்று குறிப்பிட்டார்.
மேலும், திட்டத்தில் உள்ள சிக்கலான தன்மையை அவர் எடுத்துரைத்தார்.
புதிய ரயில் பாதை, இணைப்பை கணிசமாக மேம்படுத்தும் மற்றும் மிசோரமில் உள்ள மக்களின் வாழ்க்கையை மாற்றும் என்று அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
“நீண்ட காலமாக இந்தியாவில் எந்தக் கட்சி அல்லது கூட்டணி ஆட்சி மத்தியில் அமைந்தாலும், வடகிழக்கு மாநிலங்கள் புறக்கணிக்கப்படுவதாக அதிருப்தி நிலவி வந்தது. அந்த நிலையை மத்திய பாஜக அரசு மாற்றி உள்ளது,” என்று அக்கட்சிப் பிரமுகர்கள் கூறி வருகின்றனர்.