ஒடிசா: வெட்டவெளியில் அவசரமாகத் தரையிறங்கிய விமானம்

1 mins read
8aeb8c40-82c8-45a5-b76a-99def8b3c32e
இந்தியா ஒன் ஏர் நிறுவனத்தின் சிறிய ரக பயணிகள் விமானம் ஒன்று தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஞாயிற்றுக்கிழமை நண்பகல் புவனேஸ்வரின் ரூகேலாவில் வெட்டவெளியில் தரையிறக்கப்பட்டது. - படம்: இந்து தமிழ் திசை

புவனேஸ்வர்: சிறிய ரக தனியார் பயணிகள் விமானம் ஒன்று ஒடிசாவின் புவனேஸ்வர் நகரில் இருந்து ரூர்கேலா நகருக்குப் புறப்பட்டது. புறப்பட்டு 50 நிமிடங்களிலேயே தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசரமாக ஒரு வெட்டவெளியில் தரையிறக்கப்பட்டது.

விமானி உறுதியுடனும் திறமையுடனும் செயல்பட்டு நண்பகல் 1.20 மணி அளவில் ரூர்கேலாவில் இருந்து சுமார் 15-20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு வெட்டவெளிப் பகுதியில் விமானத்தை அவசரமாக தரையிறக்கினார்.

இந்த விமானம் ஒன்பது இருக்கைகள் கொண்ட செஸ்னா கிராண்ட் கேரவன் வகையைச் சேர்ந்தது.

“விமானத்தில் இரண்டு பணியாளர்களும், நான்கு பயணிகளும் இருந்தனர். விமானத்தில் இருந்த அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். யாருக்கும் கடுமையான காயங்கள் ஏற்படவில்லை,’’ என்று ‘இந்தியா ஒன் ஏர்’ விமான நிறுவனம் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்