நாடு முழுவதும் ஒரே நேரக் கட்டமைப்பு: இந்திய அரசு அறிவிப்பு

நாடு முழுவதும் ஒரே நேரக் கட்டமைப்பு: இந்திய அரசு அறிவிப்பு

1 mins read
0e08f8c3-6763-4c39-aab2-75ac7ceae50f
தற்போது வெவ்வேறு தனியார், வெளிநாட்டு நேர ஆதாரங்கள் பயன்படுத்தப்படுவதால் ஏற்படும் முரண்பாடுகளைக் களைந்து, நாடு முழுவதும் ஒரே சீரான நேரக் அமைப்பைக் கொண்டுவருவதே இதன் முதன்மை நோக்கம். - கோப்புப் படம்: நேஷன் பாத்
Google News Preferred Icon

புதுடெல்லி: இந்தியாவில் ஒரே நேரக் கட்டமைப்பை (ஐஎஸ்டி) அதிகாரபூர்வமாக வகுத்துள்ளது அந்நாட்டு அரசு.

இனி அனைத்து மின்னிலக்க, அத்தியாவசியச் சேவைகளும் இந்த ஒரே தேசிய நேரக் கட்டமைப்பின்கீழ் ஒருங்கிணைக்கப்பட்டுச் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டின் அனைத்துச் சட்டபூர்வ, நிர்வாக, வணிகப் பயன்பாடுகளுக்கு அதிகாரபூர்வ நேரத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனப் பயனீட்டாளர் விவகாரங்களுக்கான அமைச்சு அறிக்கையில் ஒன்றில் தெரிவித்துள்ளது.

தற்போது வெவ்வேறு தனியார், வெளிநாட்டு நேர ஆதாரங்கள் பயன்படுத்தப்படுவதால் ஏற்படும் முரண்பாடுகளைக் களைந்து, நாடு முழுவதும் ஒரே சீரான நேரக் கட்டமைப்பைக் கொண்டுவருவதே இதன் முதன்மை நோக்கம் என இந்திய அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்னிலக்கமயமாதல் தீவிரமடைந்து வரும் தற்போதைய சூழலில், வங்கிப் பரிவர்த்தனைகள், பங்குச்சந்தை செயல்பாடுகள், தொலைத்தொடர்புச் சேவைகள், மின்சார விநியோகக் கட்டமைப்பு, ரயில்-விமானப் போக்குவரத்து ஆகியவற்றுக்கு துல்லியமான நேரப்பதிவு முக்கியம்.

இப்புதிய விதியானது, அரசிதழில் வெளியிடப்பட்ட நாளிலிருந்து 180 நாள்களுக்குப் பிறகு அதிகாரபூர்வமாக நடைமுறைக்கு வரும். அரசுத் துறைகள், தனியார் நிறுவனங்கள், நிதி அமைப்புகள் தங்களது கணினி, தொழில்நுட்பக் கட்டமைப்புகளை புதிய முறைக்கேற்ப மாற்றியமைத்துக்கொள்ள காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

‘ஒரே நாடு, ஒரே நேரம்’ என்ற திட்டத்தின்கீழ் வெளிநாட்டுச் செயற்கைக்கோள் நேர ஆதாரங்களைச் சார்ந்திருக்கும் நிலை படிப்படியாகக் குறைக்கப்படும்.

நாட்டின் பாதுகாப்பையும் நம்பகத்தன்மையையும் உறுதிசெய்ய, இந்தியாவின் சொந்த விண்வெளி அமைப்பான ‘நாவிக்’ செயற்கைக்கோள் வழிசெலுத்தல், அங்கீகரிக்கப்பட்ட இந்திய நேர மூலங்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட உள்ளன.

குறிப்புச் சொற்கள்
நேரம்மத்திய அரசுஅறிவிப்புசெயற்கைக்கோள்தனியார்