இணையம் இல்லாமல் இயங்கும் கீதை செயலி; சிறுவன் சாதனை

இணையம் இல்லாமல் இயங்கும் கீதை செயலி; சிறுவன் சாதனை

படம்: டைம்ஸ் ஆஃப் இந்தியா

25 Sep 2026 - 7:17 pm

1 mins read

பெங்களூரு: விரிஷ்வர்தன் சர்மா என்ற ஒன்பது வயது சிறுவன் 13 இந்திய மொழிகளில் முழுமையான பகவத் கீதையை வழங்கும் ‘கீதாவர்தன்’ என்ற செயலியை உருவாக்கியுள்ளார்.

ஐந்து வயதில், விரிஷ்வர்தன் பகவத் கீதை முழுவதையும் மனப்பாடம் செய்து ஒப்பித்தவர். ஆறு வயதில், தேசிய கீதை பதக்கத்தை வென்றார். பின்னர் சமயப் பாடல்கள் பலவற்றை ஒப்பித்து சாதனைகள் படைத்தார்.

தனது ஒன்பது வயதில் ‘பைதான்’, ‘சி’ உள்ளிட்ட நவீனக் கணினி மென்பொருள் மொழிகளையும் சுயமாகவே கற்றுக் கொண்டார்.

இந்த சுயகற்றல் திறன்களைப் பயன்படுத்தி, ‘கீதாவர்தன்’ செயலியை அவர் உருவாக்கினார்.

அதில் உள்ள ஒவ்வொரு வழிப்பாட்டு மந்திரமும் விரிஷ்வர்தனின் சொந்தக் குரலில் இடம் பெற்றுள்ளது. இணையத் தொடர்பு இல்லாமலேயே இயங்கும் அந்தச் செயலி முற்றிலும் இலவசமானது.

மேலும், அதில் விளம்பரங்களோ அல்லது பயனர்களைக் கண்காணிக்கும் தொழில்நுட்பமோ இல்லை.

பெங்களூருக்குப் புதிதாக வருபவர்கள் கன்னடத்தை இயல்பாகக் கற்றுக் கொள்ள உதவும் ‘கன்னடவர்தன்’ என்ற கருவியையும் அவர் உருவாக்கியுள்ளார்.

மேலும், குரல் மூலம் இயங்கக்கூடிய சட்டைப்பையில் வைத்துக்கொள்ளும் அளவிலான கீதை வாசிப்பு கருவியையும் அவர் வடிவமைத்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்