தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆண்டுக்கு ரூ.880 கோடி சூதாட்டம்: ஷிகர் தவானிடம் அமலாக்கத்துறை விசாரணை

2 mins read
2f4cab35-15e2-4c8e-988a-4ab16b26b65f
முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான். - படம்: ஊடகம்

புதுடெல்லி: இணைய சூதாட்ட செயலியுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷிகர் தவானிடம் அமலாக்கத்துறை விசாரணை விசாரித்து வருகிறது.

1எக்ஸ் பெட்டிங் எனும் சட்ட விரோதமான சூதாட்டச் செயலியில் தொடர்பு இருப்பதாகத் தலைமை அலுவலகத்தில் வியாழக்கிழமை (செப்டம்பர் 4) காலை விசாரணை தொடங்கியது. 1எக்ஸ் பெட்டிங் செயலியை விளம்பரம் செய்தல், அதற்கான ஆதரவு தெரிவித்தல் தொடர்பாக அமலாக்கத்துறை அவரிடம் விசாரித்தது.

தடை செய்யப்பட்ட அந்தச் சூதாட்ட செயலியில் பலரும் கோடிக்கணக்கான பணத்தை முதலீடு செய்வதாலும் வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாகவும் அமலாக்கத்துறை குற்றம் சுமத்துகிறது.

இந்த செயலியின் விளம்பரத் தூதராக இருந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட பல பிரபலங்களிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியுள்ளது.

செயலியை விளம்பரப்படுத்திய முன்னணி நடிகர்கள் பிரகாஷ் ராஜ், ராணா டக்குபதி, விஜய் தேவரகொண்டா, நிதி அகர்வால், பிரணிதா உட்பட 25 பேர்மீது தெலுங்கானா காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

22 கோடி இந்தியர்கள் விதவிதமான சூதாட்ட செயலில் ஈடுபடுகிறார்கள். அவர்களில் பாதிப் பேர் தொடர்ச்சியாக ஈடுபடுவதாகவும் அண்மை ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவிலிருந்து 100 மில்லியன் அமெரிக்க டாலர் (கிட்டத்தட்ட ரூ.880 கோடி) அளவுக்குச் சூதாட்டம் நடைபெறுவதாகவும் இதன் வளர்ச்சி ஆண்டுக்கு 30 விழுக்காடு அதிகரிப்பதாகவும் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்திய அரசு கடந்த 2022 முதல் 2025 ஜூன் வரையில் 1,524 சூதாட்டச் செயலிகளை முடக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, சூதாட்டச் செயலி தொடர்பான மோசடிப் புகாரில் சிக்கியுள்ள கர்நாடக எல்எல்ஏ கே.சி.வீரேந்திராவின் ரூ.55 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி வைத்துள்ளது.

குறிப்புச் சொற்கள்