தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சுரங்க விபத்தில் உயிரிழந்தவரின் ஒரு கை மட்டுமே வெளியே தெரிகிறது: நீடிக்கும் மீட்புப் பணிகள்

1 mins read
db6721d7-4382-42b0-8f17-07948d2ddca1
நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள அந்தச் சுரங்கத்தில் கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி திடீரென மேற்கூரைப் பகுதி இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. - படம்: இந்திய ஊடகம்

ஹைதராபாத்: தெலுங்கானா சுரங்க விபத்தில் சிக்கி உயிரிழந்த ஊழியரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து அவரது குடும்பத்தாருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிவித்துள்ளார்.

நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள அந்தச் சுரங்கத்தில் கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி திடீரென மேற்கூரைப் பகுதி இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.

பெரும்பாலான ஊழியர்கள் அங்கிருந்து தப்பியோடினர். எனினும் எட்டு பேர் மட்டும் சுரங்கத்துக்குள் இடிபாடுகளில் சிக்கியது பின்னர் தெரியவந்தது.

இதனையடுத்து, தீவிர மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மொத்தம் 11 நிபுணத்துவம் வாய்ந்த மீட்புக் குழுவினர் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். எனினும் அக்குழுக்கள் இதில் பல்வேறு சிக்கல்களையும் சவால்களையும் எதிர்கொண்டுள்ளன.

விபத்து நிகழ்ந்த சுரங்கம் 14 கிலோ மீட்டர் நீளமுள்ளது. அதனுள்ளே சிக்கியவர்களை ரோபோடிக் தொழில்நுட்ப உதவியுடன் மீட்கும் பணிகள் நடந்து வருகின்றன.

தெலுங்கானா அரசு இந்த விபத்தை இயற்கைப் பேரிடராக அறிவித்துள்ளது.

இரண்டு வாரங்களாக நீடித்த மீட்புப் பணியின்போது ஒரே ஒரு ஊழியரின் உடல் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இடிபாடுகளுக்கு இடையே அவரது ஒரு கை மட்டுமே வெளியே தென்படுகிறது. அவரது பெயர் குல்பிரீத் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளது என்றும் அவரது குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும் முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்