புதுடெல்லி: ஜவஹர்லால் தேசிய பல்கலைக்கழகத்தையும் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பொதுப் பல்கலைக்கழகத்தையும் தொடர்ந்து, துருக்கியில் உள்ள பல்கலைக்கழகங்களுடன் ஐஐடி பாம்பே அனைத்து ஏற்பாடுகளையும் நிறுத்திக்கொண்டுள்ளது. இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவிவரும் வேளையில் பாகிஸ்தானுக்கு துருக்கி ஆதரவு தந்திருப்பதே இதற்குக் காரணம்.
ஐஐடி பாம்பே எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “துருக்கி சம்பந்தப்பட்ட தற்போதைய புவிசார் அரசியல் சூழலால், அடுத்த அறிவிப்பு வெளிவரும்வரை துருக்கி பல்கலைக்கழகங்களுடன் ஐஐடி பாம்பே கொண்டுள்ள உடன்பாடுகளை நிறுத்திவைத்துள்ளது,” என்றது.
மேலும், சண்டிகர் பல்கலைக்கழகம் உட்பட தனியார் கல்வி நிலையங்கள், துருக்கியிலும் அஸர்பைஜானிலும் உள்ள 23 பல்கலைக்கழகங்களுடன் பங்காளித்துவத்தை நிறுத்திக்கொண்டுள்ளன. ‘ஆப்பரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின்போது அவ்விரு நாடுகளும் பாகிஸ்தானுக்கு ஆதரவளித்ததே இதற்குக் காரணம்.