போர் விமானங்களைச் சுட்டதாகப் பாகிஸ்தான் கூறுவது பொய்: இந்தியா

போர் விமானங்களைச் சுட்டதாகப் பாகிஸ்தான் கூறுவது பொய்: இந்தியா

1 mins read
7d95b116-a8e6-475f-84c2-2125f8597843
இந்தியாவின் 36 ரஃபேல் போர் விமானங்​களும் நாட்டின் விமானப்படை சேவை​யில் இருப்​ப​தாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. - படம்: இந்​திய விமானப்​படை

புதுடெல்லி: ரஃபேல் போர் விமானங்​களைச் சுட்டு வீழ்த்​தி​ய​தாக பாகிஸ்தான் கூறு​வது பொய் என்​று இந்தியா தெரிவித்​துள்​ளது.

மேலும், இந்தியாவின் 36 ரஃபேல் போர் விமானங்​களும் நாட்டின் விமானப்படை சேவை​யில் இருப்​ப​தாக​வும் அது கூறியது.

கடந்த ஆண்டு பாகிஸ்தான் பயங்கரவாதிகள் பஹல்​காம் பகுதியில் தாக்​குதல் நடத்தினர். அதற்குப் பதிலடி தரும் விதமாக மே 6ஆம் தேதி இரவு, இந்​திய ராணுவம், பாகிஸ்​தான் மற்​றும் பாகிஸ்​தான் ஆக்கிரமிப்பு பகுதியான காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களைத் தாக்கியது.

இதன் பிறகு, இரு நாடு​களுக்​கும் இடையே ராணுவ மோதல் தொடங்​கியது. பின்னர் சண்டை நிறுத்த ஒப்​பந்​தத்தால் பூசல் முடிவுக்கு வந்தது.

இருப்பினும் சண்டை காலத்தில் இந்​தி​யாவின் ஐந்து ரஃபேல் போர் விமானங்​களைச் சுட்டு வீழ்த்​தி​ய​தாக பாகிஸ்​தான் தெரி​வித்​தது. அதை இந்​தியா திட்​ட​வட்​ட​மாக மறுத்​தது.

இதுதொடர்​பாக இந்​திய விமானப்​படை வெளி​யிட்​டுள்ள ஆவணத்​தில் கூறி​யிருப்​ப​தாவது, “2016ஆம் ஆண்டு இந்​தியா-பிரான்ஸ் இடையே கையெழுத்​தான ஒப்​பந்​தத்​தின்​படி வாங்​கப்​பட்ட 36 ரஃபேல் போர் விமானங்​களும் சேவை​யில் உள்​ளன. இந்த விமானங்​களைப் பராமரிப்​ப​தற்​கான ஐந்து மாதக் கால ஏலம் மீண்​டும் கோரப்​பட்​டுள்​ளது,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்​மூலம் எந்த ஒரு ரஃபேல் விமான​மும் சுட்டு வீழ்த்தப்படவில்லை என்​பது உறு​தி​யாகி​யுள்​ளது.

ஏதேனும் விமான இழப்பு ஏற்​பட்​டிருந்​தால், பராமரிப்பு ஏல ஆவணத்தில் குறிப்​பிடப்​பட்​டுள்ள வி​மானங்​களின் எண்​ணிக்​கை குறை​வாகவே இருந்​திருக்​கும்​ என்​று கவனிப்பாளர்கள் கூறியுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்