தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விமானக் கழிவறையிலிருந்து வெளியே வர மறுத்த பயணி

1 mins read
845cd9a4-c906-4d0f-bd75-e01aa897b082
ஹைதராபாத்-பாட்னா இடையே இயக்கப்பட்ட இண்டிகோ விமானத்தில் இச்சம்பவம் நிகழ்ந்தது. - படம்: ஊடகம்

பாட்னா: விமானக் கழிவறைக்குள் தன்னையே வைத்துப் பூட்டிக்கொண்டு, வெளியே வர மறுத்த பயணியால் பரபரப்பு நிலவியது.

இச்சம்பவம் இந்தியாவின் ஹைதராபாத்-பாட்னா நகரங்களுக்கு இடையே இயக்கப்பட்ட இண்டிகோ விமானத்தில் நிகழ்ந்தது.

தங்களிடம் முறைதவறி நடந்துகொண்டதாக விமான ஊழியர்கள் புகார் கூறியதை அடுத்து, அவர் கழிவறைக்குள் சென்று புகுந்துகொண்டதாகக் கூறப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, விமானம் பாட்னாவில் தரையிறங்கியதும் அவர் கைதுசெய்யப்பட்டார்.

“கமார் ரியாஸ் என்ற அப்பயணி, மனநலப் பிரச்சினைக்காக சிகிச்சை பெற்று வருபவர். அது தொடர்பான மருத்துவ அறிக்கைகளும் அவரிடம் இருந்தது. தம் உறவினர் ஒருவருடன் அவர் ஹைதராபாத்திலிருந்து பாட்னாவிற்குப் பயணம் செய்தார்,” என்று விமான நிலையக் காவல் நிலைய அதிகாரி தெரிவித்ததாக ‘ஏஎன்ஐ’ செய்தி வெளியிட்டுள்ளது.

இண்டிகோ நிறுவனப் பணியாளர் புகாரளித்ததையடுத்து அவர் கைதுசெய்யப்பட்டதாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்