தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

எம்ஜிஆரை நினைவுகூர்ந்த பவன் கல்யாண்

1 mins read
fd7bd677-80fc-46f4-a286-68ae1cc5acd9
ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண். - படம்: இந்திய ஊடகம்

அமராவதி: ஆந்திர மாநில துணை முதல்வரும் நடிகருமான பவன் கல்யாண், தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் குறித்து நெகிழ்ச்சியான பதிவு ஒன்றைத் தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

“புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மீது எனக்குள்ள அன்பும் அபிமானமும் சென்னையில் நான் வளர்ந்ததில் ஓர் அங்கம். அது இன்னும் அப்படியே இருக்கிறது. வரும் அக்டோபர் 17ஆம் தேதியன்று அதிமுகவின் 52வது ஆண்டு விழா. புரட்சித் தலைவரின் அன்பர்கள், அபிமானிகள், ரசிகர்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகள்.

“மயிலாப்பூரில் படித்தபோது எனது தமிழ்மொழி ஆசிரியர் மூலம் புரட்சித் தலைவரைப் பற்றி எனக்கு முதல் அறிமுகம் கிடைத்தது. அவர் திருக்குறளில் இருந்து ஒரு குறளைப் படித்து, புரட்சித் தலைவரின் குணங்கள் இந்தத் திருக்குறளில் பிரதிபலிக்கின்றன என்றார்.

“கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும் உடையானாம் வேந்தர்க் கொளி.”

நன்மை, கருணை, நேர்மை, மக்கள் மீது அக்கறை ஆகிய நான்கும் கொண்ட அரசன், அரசர்களுக்கெல்லாம் விளக்குப் போன்றவன்.

இவ்வாறு பவன் கல்யாண் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார்.

குறிப்புச் சொற்கள்