தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
ஏர் இந்தியா விபத்து

மனிதத் தவற்றுக்கான குற்றச்சாட்டுகளை விமானிகள் சங்கங்கள் நிராகரித்தன

2 mins read
60ee872d-319d-456e-8853-37ea14f362c4
ஊகக் கதைகளால், குறிப்பாக விமானி தற்கொலை என்ற பொறுப்பற்ற, ஆதாரமற்ற குற்றச்சாட்டால் தான் மிகவும் வருத்தமடைந்துள்ளதாக இந்திய வர்த்தக விமானிகள் சங்கம் கூறியது. - படம்: ராய்ட்டர்ஸ்

புதுடெல்லி: ஜூன் மாதம் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தில் 260 பேர் உயிரிழந்த நிலையில், விமானத்தின் இயந்திர எரிபொருள் சுவிட்சுகள் அணைக்கப்பட்டிருந்ததாக ஆரம்பகட்ட விசாரணையில் கண்டறியப்பட்ட போதிலும், மனிதத் தவறே விபத்திற்குக் காரணம் என்ற குற்றச்சாட்டுகளை இரண்டு பெரிய வர்த்தக விமானிகள் சங்கங்கள் நிராகரித்துள்ளன.

இந்தியாவின் விமான விபத்து விசாரணைப் பிரிவு ஜூலை 12ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில், ஜூன் 12ஆம் தேதி நடந்த விபத்துக்கான எந்தவொரு முடிவையும் வெளியிடவில்லை அல்லது யாருடைய தவற்றையும் சுட்டிக்காட்டவில்லை.

ஆனால், ஒரு விமானி மற்றவரிடம் ஏன் எரிபொருளை நிறுத்தினார் என்று கேட்டதாகவும், அதற்கு இரண்டாவது விமானி தான் அவ்வாறு செய்யவில்லை என்று பதிலளித்ததாகவும் அறிக்கை குறிப்பிட்டிருந்தது.

விமானிகளுக்கு இடையேயான விமானியறை உரையாடல் குறித்த மேல்விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

இந்நிலையில், “ஊகக் கதைகளால், குறிப்பாக விமானி தற்கொலை என்ற பொறுப்பற்ற, ஆதாரமற்ற குற்றச்சாட்டால் தான் மிகவும் வருத்தமடைந்துள்ளதாக” இந்திய வர்த்தக விமானிகள் சங்கம் கூறியது.

“இந்தக் கட்டத்தில் அத்தகைய கூற்றுக்கு எந்த அடிப்படையுமில்லை,” என்று அது ஜூலை 13ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

மேலும், “சம்பந்தப்பட்ட தனிநபர்கள், குடும்பங்களின் உணர்வுகளை இது பொருட்படுத்தவில்லை..

“சரிபார்க்கப்பட்ட ஆதாரம் இல்லாமல் விமானி தற்கொலை என்று சாதாரணமாகக் கூறுவது நெறிமுறை சார்ந்த அறிக்கையின் பெரும் மீறல், இந்தத் தொழிலின் கண்ணியத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி,” என்றும் அது தெரிவித்தது.

800 உறுப்பினர்களைக் கொண்ட மற்றொரு விமானிகள் அமைப்பான இந்திய விமானிகள் சங்கம் (Alpa India), விசாரணையைச் சுற்றியுள்ள ‘ரகசியத்தன்மை’ குறித்து விசாரணை நிறுவனத்தைக் குற்றம் சாட்டியதுடன், ‘தகுதியான பணியாளர்கள்’ இதில் ஈடுபடுத்தப்படவில்லை என்றும் கூறியது.

குறிப்புச் சொற்கள்