இந்திய அதிபர் திரௌபதி முர்மு ஆப்பிரிக்கா பயணம்

1 mins read
5da744ae-2a44-4f5a-8c93-194a581b695b
இந்திய அதிபர் திரௌபதி முர்மு. - கோப்புப்படம்: ஊடகம்

புதுடெல்லி: இந்திய அதிபர் திரௌபதி முர்மு அங்கோலா மற்றும் போட்ஸ்வானா ஆகிய நாடுகளுக்கு ஆறு நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்தப் பயணம் மூலம் பாதுகாப்பு, வர்த்தகம், எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் அந்நாடுகளுடன் இணைந்து செயல்பட வழிவகுப்பதோடு இந்தியாவுக்கும் அந்த நாடுகளுக்கும் இடையேயான உறவை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அங்கோலா நாட்டின் தலைநகர் லுவாண்டா நகரில் அந்த நாட்டின் அதிபரை, இந்திய அதிபர் முர்மு சந்திக்கிறார்.

இந்தச் சந்திப்பின்போது இருநாட்டு உறவு, வர்த்தகம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் ஆலோசிக்க உள்ளனர். மேலும், அங்கோலா நாட்டின் 50ஆம் ஆண்டு சுதந்திர தினவிழாவில் அதிபர் முர்மு பங்கேற்கிறார்.

அங்கோலா நாடாளுமன்றத்தில் அதிபர் முர்மு உரையாற்றுகிறார். பின்னர் போட்ஸ்வானாவின் தலைநகர் கபொரின் நகருக்குச் சென்று அந்நாட்டின் அதிபர் டுமா டிகொன் பொகோவை சந்தித்துப் பேசவுள்ளார். அந்நாட்டின் நாடாளுமன்றத்திலும் அவர் உரையாற்றுவார்.

குறிப்புச் சொற்கள்