தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காவல்துறை அதிகாரி வீட்டில் ரூ.7.5 கோடி ரொக்கம், 2.5 கிலோ தங்க நகை சிக்கியது

2 mins read
51370229-8959-49fd-b22e-8a255938dc7c
ஹர்சரண் சிங். - படம்: ஊடகம்

சண்டிகர்: காவல்துறை உயரதிகாரியின் வீட்டிலிருந்து ரூ.7.5 கோடி ரொக்கம், 2.5 கிலோ எடை கொண்ட தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது பஞ்சாப்பில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அம்மாநிலத்தின் ரூபார் பகுதிக்கான டிஜிபியாக பொறுப்பு வகித்து வந்தார் ஹர்சரண் சிங். இவரின் தந்தையும் டிஜிபியாக பணியாற்றியவர்தான்.

இந்நிலையில், பதேகர் சாகிப் மாவட்டத்தைச் சேர்ந்த ஆகாஷ் என்பவர், ஹர்சரண் மீது சிபிஐயில் லஞ்சப் புகார் அளித்தார்.

தாம் பழைய இரும்புப் பொருள்களை வாங்கி விற்கும் வணிகத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் தம் மீது கடந்த 2023ஆம் ஆண்டு தவறான குற்றச்சாட்டின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்ததாகவும் அவர் தமது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

“பொய்யான குற்றச்சாட்டின் பேரில் என்மீது வழக்குப்பதிவு செய்ததை வைத்து, ஹர்சரண் என்னிடம் லஞ்சம் கேட்டு மிரட்டினார். மாதந்தோறும் லஞ்சம் தராவிட்டால் என்மீது மேலும் சில பொய் வழக்குகளைப் போடுவதாகவும் அச்சுறுத்தினார்,” என்று ஆகாஷ் கூறியுள்ளார்.

ஹர்சரண் சிங்குக்கு மாதந்தோறும் அவரின் நண்பர் கிருஷ்ணா என்பவர் மூலமாக லஞ்சத் தொகையைக் கொடுத்தனுப்பியதாக குறிப்பிட்டுள்ள ஆகாஷ், ஆகஸ்ட் மாதத் தொகை இன்னும் தனக்குக் கிடைக்கவில்லை என ஹர்சரண் சிங் தம்மை மிரட்டியதாகத் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, சிபிஐ அதிகாரிகள் அறிவுறுத்தலின்பேரில் ஹர்சரண் சிங்கின் கூட்டாளியான கிருஷ்ணாவை வேறோர் இடத்துக்கு வருமாறு ஆகாஷ் கூறியதாகவும் அதன் பேரில் அங்கு சென்று கிருஷ்ணாவிடம் பணம் கொடுக்கும்போது சிபிஐ அதிகாரிகள் கையும் களவுமாக கிருஷ்ணாவைக் கைதுசெய்ததாகவும் ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

இடைத்தரகர்போல் செயல்பட்ட கிருஷ்ணாவிடமிருந்து ரூ.21 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

குறிப்புச் சொற்கள்