ராஜஸ்தான்: ராஜஸ்தான் மாநிலத்தின் ஜுன்ஜுனு மாவட்டத்தில் உள்ள பகோலி - ஜாஜ் சாலை அண்மையில் அமைக்கப்பட்டது. இந்நிலையில் அப்பகுதியில் பெய்த கனமழையால் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
அங்கு புதிதாக அமைக்கப்பட்ட சாலை, திறப்பதற்கு முன்னரே வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு விட்டது. இதனால் சுமார் 35 அடி ஆழம் கொண்ட பள்ளம் உருவாகியுள்ளது.
இந்நிலையில், தரமற்ற கட்டுமானப் பொருள்களுடன் தரமற்றுக் கட்டப்பட்டதால்தான், புதிய சாலை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
புதிய சாலை திறக்கப்படவிருப்பதை எண்ணி மகிழ்ச்சியில் இருந்த மக்களுக்கு இது பெரிய ஏமாற்றத்தைத் தந்துள்ளது. கனமழையால் அங்குள்ள கட்லி ஆறு நிரம்பி, வழிந்து வருவதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

