பைசனைப் பாராட்டிய ரஜினி

பைசனைப் பாராட்டிய ரஜினி

படம்: ஊடகம்

22 Oct 2025 - 7:20 pm

1 mins read

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான பைசன் திரைப்படத்தை நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார்.

தமிழகத்தில் அப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. அப்படத்தின் இயக்குநரைத் தொடர்புகொண்ட ரஜினிகாந்த், “’பைசன்’ படம் பார்த்தேன். படத்துக்குப் படம் உங்கள் உழைப்பும் உங்கள் ஆளுமையும் என்னை ஆச்சரியப்படுத்துகிறது. வாழ்த்துகள் மாரி. தொடர்ந்து முன்னேறுங்கள்,” என வாழ்த்தியுள்ளார்.

இதுதொடர்பாகத் தமது சமூக ஊடகத்தில், “தொலைபேசியில் அழைத்து மனதாரப் பாராட்டிய சூப்பர் ஸ்டார் அவர்களுக்கு என் சார்பாகவும் என் மொத்த படக்குழு சார்பாகவும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்,” என மாரி செல்வராஜ் பதிவிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்