உலகமெங்கும் பல மொழிகளில் வெளியீடு கண்ட ராமாயணம்

மிக அதிகமான செலவில் உருவான இந்தியத் திரைப்படம்

உலகமெங்கும் பல மொழிகளில் வெளியீடு கண்ட ராமாயணம்

1 of 2
படம்: மாத்ருபூமி
படம்: டைம்ஸ் நவ்

06 Nov 2026 - 11:33 am

2 mins read

புதுடெல்லி: இந்தியத் திரைத்துறை வரலாற்றிலேயே மிக அதிகமான செலவில் உருவான திரைப்படமான ‘ராமாயணம்: ரைஸ் ஆஃப் எ லெஜண்ட்’ (Ramayana: Rise of a Legend) உலகளவில் திரையரங்குகளில் வியாழக்கிழமை (நவம்பர் 5) வெளியீடு கண்டு பெரும் எதிர்பார்ப்பையும் கலவையான விமர்சனங்களையும் பெற்றுள்ளது.

வாலியின் ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு நிதேஷ் திவாரி இயக்கியுள்ள இத்திரைப்படம் இரண்டு பாகங்களாகத் திட்டமிடப்பட்டு, ஏறக்குறைய 500 மில்லியன் அமெரிக்க டாலர் (S$660 மில்லியன் ) செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தை நமித் மல்ஹோத்ராவின் பிரைம் ஃபோக்கஸ் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து, நடிகர் யஷ்ஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் தயாரித்துள்ளது.

ஏ.ஆர். ரஹ்மானுடன் ஹாலிவுட் இசையமைப்பாளர் ஹான்ஸ் ஸிம்மரும் இணைந்து இசையமைத்துள்ளனர்.

ராமனாக நடித்துள்ள ரன்பீர் கபூர்  அமைதியாகவும் கம்பீரமாகவும் தோன்றுகிறார்.
ராமனாக நடித்துள்ள ரன்பீர் கபூர் அமைதியாகவும் கம்பீரமாகவும் தோன்றுகிறார். - படம்: சோனி பிச்சர்ஸ்

தீபாவளியை ஒட்டித் தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் வெளியீடு கண்டுள்ள இப்படத்தில், ராமனாக ரன்பீர் கபூரும், சீதையாக சாய் பல்லவியும், ராவணனாக யஷும் ன்னி தியோல் அனுமனாகவும் நடித்துள்ளனர். தசரதராக, 1987ஆம் ஆண்டு புகழ்பெற்ற ராமாயணத் தொடரில் ராமனாக நடித்த அருண் கோவில் நடித்துள்ளார். ரவி துபே, ரகுல் பிரீத் சிங், விவேக் ஓபராய், லாரா தத்தா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் முக்கியக் கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர்.

படத்தின் தொழில்நுட்ப அம்சங்களும் காட்சிகளும் பரவலாகப் பாராட்டப்பட்டாலும், விமர்சகர்களிடையே மாறுபட்ட கருத்துகள் எழுந்துள்ளன.

பிரிட்டனின் ‘தி கார்டியன்’ நாளிதழ், ஷேக்ஸ்பியர் நாடகங்களின் ஆழமும் ‘லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்’ போன்ற பிரம்மாண்டமும் கொண்ட அருமையான சாகசப் படம் என்று பாராட்டி நான்கு நட்சத்திரங்களை வழங்கியது. ‘இந்துஸ்தான் டைம்ஸ்’ நான்கு நட்சத்திரங்களை வழங்கிப் பாராட்டிய வேளையில், ‘என்டிடிவி’ வரைகலைக் காட்சிகள் கதையின் உயிரோட்டத்தை மறைத்துவிட்டதாகக் கூறி மூன்று நட்சத்திரங்களை மட்டுமே அளித்தது.

ஆங்கிலப் பதிப்பில் நடிகர்களின் உதட்டசைவை மாற்றியமைக்கச் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) பயன்படுத்தப்பட்ட விதம் சில விமர்சகர்களால் கேலி செய்யப்பட்டுள்ளது.

ராமன் வனவாசம் செல்லும் வரையிலான முதல் பாதியின் நீளமும் கதைக்களமும் சற்று மெதுவாக நகர்வதாகக் கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு வெளியான ‘ஆதிபுருஷ்’ திரைப்படத்தின் வரைகலை, கதைமாற்றங்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இப்படத்திற்கு மக்கள் மத்தியில் கூடுதல் எதிர்பார்ப்பு நிலவியது.

ராவணனின் மிரட்டலான உடல்மொழி, சீதையாக சாய் பல்லவியின் உருக்கமான நடிப்பு, கண்கவர் காட்சி அனுபவங்கள் ஆகியவற்றுடன், சீதையை மீட்கும் அடுத்த பாகத்திற்கான பெரும் ஆவலை இத்திரைப்படம் பார்வையாளர்களிடம் ஏற்படுத்தியுள்ளது. இரண்டாம் பாகம் 2027 தீபாவளிக்கு வெளியீடு காணும்.

(இடமிருந்து) லாஸ் ஏஞ்சல்சில் உள்ள ‘அகடாமி மியூசியம் ஆஃப் மோஷன் பிக்சர்ஸ்’ அரங்கில் அக்டோபர் 27ஆம்  நடைபெற்ற ‘ராமாயணம்’ திரைப்படத்தின் முதல் சிறப்புக் காட்சியில் கலந்துகொண்ட இந்திய நடிகர் ரன்பீர் கபூர், நடிகை சாய் பல்லவி, நடிகர் யஷ், இயக்குநர்-திரைக்கதை எழுத்தாளர் நிதேஷ் திவாரி.
(இடமிருந்து) லாஸ் ஏஞ்சல்சில் உள்ள ‘அகடாமி மியூசியம் ஆஃப் மோஷன் பிக்சர்ஸ்’ அரங்கில் அக்டோபர் 27ஆம் நடைபெற்ற ‘ராமாயணம்’ திரைப்படத்தின் முதல் சிறப்புக் காட்சியில் கலந்துகொண்ட இந்திய நடிகர் ரன்பீர் கபூர், நடிகை சாய் பல்லவி, நடிகர் யஷ், இயக்குநர்-திரைக்கதை எழுத்தாளர் நிதேஷ் திவாரி. - படம்: ஏஎஃப்பி
குறிப்புச் சொற்கள்