தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மும்பை விமான நிலையம் வந்திறங்கிய பயணியிடமிருந்து அரிய வகை பாம்புகள் மீட்பு

1 mins read
cbcdbab3-e16a-4f39-8291-d9f74c402a95
தாய்லாந்திலிருந்து கடத்திவரப்பட்ட அரிய வகை பாம்புகள். - படங்கள்: ஊடகம்

மும்பை: தாய்லாந்திலிருந்து கடத்திவரப்பட்ட 16 அரிய வகை பாம்புகளை மும்பை விமான நிலைய அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பேங்காக்கிலிருந்து மும்பை வந்த விமானத்தில் அரிய வகை விலங்குகள் கடத்தப்படுவதாகச் சுங்கத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது. அதனையடுத்து, அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

ஜூன் 29ஆம் தேதி நடத்தப்பட்ட சோதனையில் பயணி ஒருவரின் உடைமைகளிலிருந்து 16 உயிருள்ள அரிய வகை பாம்புகளை அதிகாரிகள் மீட்டனர்.

அவற்றில் இரண்டு கென்ய மணல் போவாக்கள், ஐந்து காண்டாமிருக எலி பாம்புகள், மூன்று அல்பினோ பாம்புகள், ஒரு கலிபோர்னியா கிங்ஸ்னேக், இரண்டு கார்டர் பாம்புகள், ஒரு அல்பினோ எலி பாம்பு, இரண்டு ஹோண்டுரான் பால் பாம்புகள் அடங்கும்.

இதனையடுத்து, பாம்புகளைக் கடத்திய பயணியை அதிகாரிகள் கைது செய்தனர். விசாரணை தொடர்கிறது.

குறிப்புச் சொற்கள்