புதுடெல்லி: பயன்படுத்தப்படாமல் இருக்கும் வங்கிக் கணக்குகளில் மூன்று வகையான வங்கிக் கணக்குகளை மூடுவதற்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
நிதிமோசடியில் ஈடுபடும் மோசடிக்காரர்களில் பெரும்பாலோர் இதுபோன்ற பயன்பாட்டில் இல்லாத வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்தி வருகின்றனர்.
எனவே, அந்த வங்கிக் கணக்குகளை மூடுவதற்குப் புதிய வழிகாட்டி நெறிமுறைகளை ரிசர்வ் வங்கி வகுத்துள்ளது. அந்த நெறிமுறைகளின்படி வங்கிகள் செயல்படாத வங்கிக் கணக்குகளை மூடிவிட முடியும்.
இரண்டு ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் எவ்விதப் பரிவர்த்தனைகளும் செய்யப்படாத கணக்குகள் பயன்பாட்டில் இல்லாத கணக்காக வகைப்படுத்தப்படுகிறது.
12 மாதங்களுக்கு மேலாக எந்தவித பரிவர்த்தனைகளும் செய்யப்படாத கணக்குகள் செயலற்ற கணக்குகளாக வகைப்படுத்தப்படுகிறது.
இந்த வகைக் கணக்குகளை நிறுத்திவைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மீண்டும் கணக்கை செயல்பாட்டுக்கு கொண்டு வரவேண்டுமானால், வாடிக்கையாளர்கள் வங்கிக் கிளையை நேரடியாக அணுக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.