இந்திய அரசாங்கம், ரூ.2000 நோட்டுகள் செப்டம்பர் 30ஆம் தேதி வரை மட்டுமே செல்லும் என்று அறிவித்துள்ளது.
இதனால் வெள்ளிக்கிழமை (மே 19) இந்தியா முழுவதும் அதிர்ச்சியலை பரவியது.
மத்திய வங்கியான ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா, 2000 ரூபாய் நோட்டுகள் வழங்குவதை உடனே நிறுத்துமாறு அனைத்து வங்கிகளுக்கும் மே 19 உத்தர விட்டது.
வரும் 23ஆம் தேதியிலிருந்து 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து கணக்கில் வரவு வைக்கலாம் என்றும் தினமும் 20,000 ரூபாய் மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் மாற்றலாம் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
மேலும் 2000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ள செப்டம்பர் 30ஆம் தேதி இறுதி நாள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டு பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டபோது புதிய 500 ரூபாய் மற்றும் 2000 ரூபாய் நோட்டு ரிசர்வ் வங்கியால் அறிமுகம் செய்யப்பட்டன.
இந்த நிலையில் மீண்டும் ரூ. 2000 நோட்டு செல்லாது என்று இந்தியா அறிவித்துள்ளது.