பள்ளிகளுக்கான தமிழ்ப் பாடம் குறைப்பு

1 mins read
80c12cb0-8d1d-4035-bd63-c71971fd31a8
சீரமைக்கப்பட்ட தமிழ்ப் பாடநூல்கள் 2025-26ஆம் ஆண்டிலிருந்து நடைமுறைக்கு வரவுள்ளன. - மாதிரிப்படம்

சென்னை: தமிழ்நாட்டில் ஒன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரைகளுக்குமான தமிழ்ப் பாடப்பகுதிகளைப் பள்ளிக்கல்வித்துறை குறைத்துள்ளது.

கடந்த 2017ஆம் ஆண்டில் வடிவமைக்கப்பட்ட தமிழ்ப் பாடநூல்களே இப்போதும் நடைமுறையுள்ளன.

அந்நூல்களில் பாடப்பகுதிகள் அதிகமாக இருப்பதால் மாணவ, மாணவிகள் படிப்பதில் சிரமத்தை எதிர்கொள்கின்றனர் என்றும் அதனால் பாடப்பகுதிகளைக் குறைக்க வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினரிடமிருந்தும் பள்ளிக்கல்வித் துறைக்குக் கோரிக்கைகள் வந்தன.

அதனைத் தொடர்ந்து, அந்த பாடப்பகுதிகளை குறைக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்து, அதற்கான பணிகளைத் தொடங்கியது. அதன்படி, ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான தமிழ்ப் பாடநூல்களில் உள்ள நீண்ட பாடப்பகுதிகளைக் குறைக்கவும் பொருத்தமற்ற பாடப்பகுதிகளைச் நீக்கி சீரமைக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

அவ்வாறு சீரமைக்கப்பட்ட தமிழ்ப் பாடநூல்களை அச்சிடும் பணிகள் விறுவிறுப்பாக நடந்துவருவதாகவும் 2025-26 கல்வியாண்டு முதல் அந்தப் பாடநூல்கள் நடைமுறைக்கு வரவிருப்பதாகவும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்