மின்கம்பங்களில் உள்ள முறையற்ற கம்பிவடங்களை அகற்றுக: தெலுங்கானா உயர்நீதிமன்றம் உத்தரவு

1 mins read
de73fe44-c7a8-4c20-a6c3-59cc0d3fe6d3
சிக்கியிருக்கும் கம்பிவடங்களை ஊழியர் சீர்செய்யும் காட்சி. - படம்: இந்திய ஊடகம்.

ஹைதராபாத்: ஆந்திரா, தெலுங்​கா​னா மாநிலங்களில் ​மின்கம்​பங்​களில் உள்ள கம்பிவடங்கள் அகற்​றப்​படு​கின்றன.

தெலுங்கானா உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து கம்பிவடங்களை அகற்றும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. இந்துத் தமிழ் திசை இந்தத் தகவலை வெளியிட்டது.

அண்மையில் தெலுங்​கானா மாநிலத்தின் ராமந்​த​பூர் பகு​தி​யில் கிருஷ்ண ஜெயந்​தியை முன்​னிட்டு நடைபெற்ற தேர்த்திருவிழாவின்போது மின்சாரம் தாக்கி ஆறு பேர் மரணமடைந்தனர்.

மின்கம்பங்களில் சுற்றிக்கொண்டிருந்த கம்பிவட, இணைய மின்கம்பிகள் உரசியபோது மின்சாரம் பாய்ந்தது. அதில் சிக்கி அவர்கள் பலியாயினர்.

சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. கம்பிவட, இணையச் சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யவில்லை என்பது அதில் தெரியவந்தது.

அதன் பிறகு, மின்கம்பங்களில் அனுமதியின்றிச் சுற்றப்பட்டுள்ள கம்பிவடங்களை அகற்றுமாறு தெலுங்கானா அரசாங்கத்துக்கு உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

பார்தி ஏர்டெல் நிறுவனம் அதற்கு இடைக்காலத் தடை விதிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தது. உயர் நீதி​மன்​றம் அதனை நிராகரித்துவிட்​டது.

நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து ஹைத​ரா​பாத்திலும் தெலுங்​கானாவிலும் அனு​மதியில்லாமல் மின்கம்பங்களில் சுற்றப்பட்ட கம்பிவடங்களை ஊழியர்கள் அகற்றிவருகின்றனர்.

முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கை​யாக ஆந்​தி​ரா​விலும் திருப்பதி உட்பட பல நகரங்​களில் அத்தகைய கம்பிவடங்களை அகற்றும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ஹைதராபாத்தில் 2 மில்லியனுக்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் உள்ளன. அவற்றுள் சுமார் 175,000 மின்கம்பங்களுக்கு மட்டுமே அனுமதி பெறப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்