டெல்லியில் காற்று மாசுபாடு, நச்சுத்தன்மை அதிகரிப்பு

டெல்லியில் காற்று மாசுபாடு, நச்சுத்தன்மை அதிகரிப்பு

படம்: ராய்ட்டர்ஸ்

04 Nov 2026 - 7:16 pm

1 mins read

புதுடெல்லி: இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் காற்று மாசுபாடு மிக மோசமான உச்சத்தை எட்டியுள்ளது.

புதன்கிழமை (நவம்பர் 4) நிலவரப்படி, டெல்லியின் பல பகுதிகளில் காற்றின் தரம் அபாயகரமான கட்டத்தைத் தாண்டியுள்ளது.

உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்துள்ள பாதுகாப்பான அளவைவிட 30 மடங்குக்கும் அதிகமாக காற்றில் நச்சுத்தன்மை அதிகரித்துள்ளது. நுண் துகள்களின் அளவு ஒரு கன மீட்டருக்கு 461 மைக்ரோகிராம் வரை உயர்ந்துள்ளதாக அனைத்துலக காற்றுத் தரக் கண்காணிப்பு அமைப்பான ‘ஐகியூஏர்’ (IQAir) தெரிவித்துள்ளது.

இது மனித ரத்தத்தில் நேரடியாகக் கலந்து கடுமையான சுவாசக் கோளாறுகளையும் புற்றுநோயையும் ஏற்படுத்தக்கூடிய ஆபத்து கொண்டது எனக் கூறப்படுகிறது.

வரும் நவம்பர் 8 அன்று கொண்டாடப்பட உள்ள தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, பட்டாசுகள் வெடிக்கப்படுவதால் காற்றின் தரம் மேலும் சீர்குலையும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

உச்ச நீதிமன்றம் குறைந்த புகையை வெளியிடும் ‘பசுமைப் பட்டாசுகளுக்கு’ மட்டுமே அனுமதி அளித்திருந்தாலும், விதிமுறைகள் மீறப்படுவதால் நகரின் பெரும்பகுதியை அடர்ந்த நச்சுப்புகை சூழ்ந்துள்ளது.

டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் தரவுகளின்படி, குளிர்கால மாசுபாட்டில் 23 விழுக்காடு அளவுக்கு வாகனப்புகை முதன்மைக் காரணியாக உள்ளது. விவசாயக் கழிவுகள் எரிக்கப்படுவதால் 20 விழுக்காடு மாசு ஏற்படுகிறது.

நிலக்கரி மின் நிலையங்கள் உட்பட தொழில்துறை கழிவுகள் 9 விழுக்காடு மாசை உண்டாக்குகின்றன.

காற்றில் உள்ள பல்வேறு வேதிப்பொருள்கள், விவசாய உரங்களிலிருந்து வெளிப்படும் அம்மோனியா வாயுவினால் உருவாகும் துகள்கள் 27% மாசுபாட்டை ஏற்படுத்துகின்றன.

குறிப்புச் சொற்கள்