மாணவர் போராட்டங்கள் வன்முறையாக மாறும் ஆபத்து: டெல்லி உயர் நீதிமன்றம்

மாணவர் போராட்டங்கள் வன்முறையாக மாறும் ஆபத்து: டெல்லி உயர் நீதிமன்றம்

கோப்புப் படம்: லெக்ஸ்பீடியா

21 Oct 2026 - 5:34 pm

1 mins read

புதுடெல்லி: மாணவர் போராட்டங்கள் எதிர்பாராத விதமாக வன்முறையாகவும் பொதுச் சொத்துகளைச் சூறையாடும் சம்பவங்களாகவும் உருவெடுக்கும் அபாயம் உள்ளதாக டெல்லி உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

அண்மையில் டெல்லியில் போராட்டம் நடத்திய கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் (சிஜேபி) தலைவர்கள் சௌரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். தங்களை விடுவிக்கக் கோரி அவர்கள் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின்போது டெல்லி உயர் நீதிமன்றம் சில முக்கியமான கருத்துகளை முன்வைத்தது.

காவல்துறையின் அனுமதி என்பது கண்காணிப்புக்காக மட்டுமன்றி, போராட்டங்களின் பெயரால் சமூக விரோதிகள் ஊடுருவி சட்டம்-ஒழுங்கைச் சீர்குலைப்பதைத் தடுப்பதற்காகவே அவசியமாகிறது என நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

மேலும், பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற மாணவர் போராட்டங்களைச் சுட்டிக்காட்டிய நீதிமன்றம், அமைதியான முறையில் தொடங்கும் போராட்டம் உரிய கட்டுப்பாடுகளும் வழிகாட்டல்களும் இன்றிப் போகும்போது எத்தகைய ஆபத்தான வன்முறை, தீவைப்பு மற்றும் கொள்ளைச் சம்பவங்களாக மாறக்கூடும் என்பதை நினைவுகூர்ந்தது.

பொதுச் சொத்துகளுக்குச் சேதம் விளைவிப்பதைத் தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மிக அவசியமானவை என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியது.

குறிப்புச் சொற்கள்