இந்தி தெரியாததால் ரூ. ஒரு லட்சம் கோடி இழந்தேன்: ‘ஏர்செல்’ சிவசங்கரன் வேதனை

1 mins read
22f5a09f-a94f-48ee-9756-6bb7b000cf8f
‘ஏர்செல்’ நிறுவனர் சிவசங்கரன். - படம்: ஊடகம்

புதுடெல்லி: இந்தி மொழி தெரியாததால் ஒரு லட்சம் கோடி ரூபாய் இழப்பைச் சந்தித்ததாக ஏர்செல் நிறுவனர் சிவசங்கரன் தெரிவித்துள்ளார்.

68 வயதான திரு சிவசங்கரன் சென்னையைச் சேர்ந்தவர். சமூக ஊடகப் பிரபலமான ரன்வீர் அலபாடியா நடத்திய வலையொளி நிகழ்ச்சி ஒன்றில் அவர் கலந்துகொண்டார்.

அதில், தன் வாழ்க்கை அனுபவங்களைப் பகிர்ந்துகொண்ட அவர், இந்தி தெரியாததால் தம்மால் இந்தியா முழுவதிலும் உள்ள 140 கோடி மக்களையும் ஈர்க்க முடியவில்லை என வேதனையுடன் கூறினார்.

24 வயதில் தொடங்கிய தமது பயணத்தில், இளம் வயது முதல் பல்வேறு துறைகளில் காலூன்றி வாழ்க்கையின் பல ரகசியங்களைக் கற்றுக் கொண்டதாகவும் முக்கியமான இரு பணிகளைச் செய்யாததால் மிகப் பெரிய இழப்பைச் சந்தித்ததாகவும் அந்நிகழ்ச்சியில் அவர் தெரிவித்தார்.

அதில் முதலாவது இந்தி மொழி கற்றுக்கொள்ளாதது, மற்றொன்று இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு இடம்பெயராமல் இருந்தது என்றார் அவர்.

வாழ்க்கையில் கடன் வாங்குவதைவிட, பணத்தை ஈர்க்கும் திறனே வெற்றிக்கு அடிப்படை என்றும் திரு சிவசங்கரன் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்