தமிழகத்துக்கு தண்ணீரில் பங்கு: கேரளா நிபந்தனை

தமிழகத்துக்கு தண்ணீரில் பங்கு: கேரளா நிபந்தனை

1 mins read
30a9fc89-2c85-4691-83a6-1cd2fe81dd4d
முல்​லைப் பெரி​யாறு புதிய அணை கட்​டப்​பட்​டால், தமிழகத்துக்கான முழு நீர்ப் பங்​கை​யும் வழங்க கேரளா தயார் எனத் திரு. சுதீசன் குறிப்பிட்டுள்ளார். - கோப்புப் படம்: ஏபிபி நியூஸ்
Google News Preferred Icon

திருவனந்தபுரம்: தமிழகத்துக்குரிய நீர்ப்பங்கை முழுமையாகத் தர கேரளா தயாராக இருப்பதாக அம்மாநில முதல்வர் வி.டி. சுதீசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தமது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், புதிய முல்​லைப் பெரி​யாறு அணை கட்​டப்​பட்​டால், தமி​ழ​கத்​துக்கான முழு நீர்ப் பங்​கை​யும் வழங்க கேரளா தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய அணை​யின் வடிவ​மைப்​பு, இடத் தேர்வு, கட்​டு​மானப் பணி​களைத் தமி​ழ​கமே மேற்​கொள்​ளலாம் என்றும் அதற்​கான முழுச் செல​வை​யும் கேரளம் ஏற்​கும் என்றும் முதல்வர் சுதீசன் தமது பதிவில் கூறியுள்ளார்.

முல்லைப் பெரியாறு அணையில் நீர் தேக்கி வைப்பது தொடர்பாக தமிழகத்துக்கும் கேரளாவுக்கும் இடையே நீண்டகாலமாக கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.

அணை பலவீனமாக இருப்பதால் தமிழகம் கோரும் அளவுக்கு நீரைத் தேக்கி வைக்க இயலாது என்றும் முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டுவதே நல்ல தீர்வாக அமையும் என்றும் கேர்ள அரசு கூறி வருகிறது.

தென் மாநிலங்​களுக்கு இடையி​லான ஒத்​துழைப்​பின் மூலம், விழிஞ்​ஞத்தை மைய​மாகக் கொண்டு கேரளாவை முன்​னணித் துறை​முக நகர​மாக​ தமிழகம் ஒத்துழைக்க வேண்டுமென்று வலியுறுத்தியுள்ள அவர், இதன்மூலம் கேரளாவைக் கடல்சார் பொருளியல் மையமாக மாற்​ற முடியுமெனத் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்