80,886 மெட்ரிக் டன் கச்சா எண்ணெய்யுடன் இந்தியா வந்தடைந்த கப்பல்

80,886 மெட்ரிக் டன் கச்சா எண்ணெய்யுடன் இந்தியா வந்தடைந்த கப்பல்

1 mins read
கச்சா எண்ணெய் வரத்து உள்ளதால் இந்தியாவில் நிலவும் எரிவாயுக் கலன் தட்டுப்பாடு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
66c3db46-3849-4c73-a5e4-be6c09fd420b
ஏறக்குறைய 80,886 மெட்ரிக் டன் கச்சா எண்ணெய்யை ஏற்றி வந்த ‘ஜக் லாட்கி’ கப்பல் குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. - படம்: எக்னாமிக்ஸ் டைம்ஸ்

அகமதாபாத்: ஐக்கிய அரபுச் சிற்றரசில் இருந்து கிட்டத்தட்ட 80,886 மெட்ரிக் டன் கச்சா எண்ணெய்யை ஏற்றி வந்த ‘ஜக் லாட்கி’ கப்பல் புதன்கிழமை (மார்ச் 18) குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தை வந்தடைந்தது.

மார்ச் 14ஆம் தேதி ஐக்கிய அரபுச் சிற்றரசின் ஃபுஜைரா துறைமுகத்திலிருந்து எண்ணெய் ஏற்றிக்கொண்டு அந்தக் கப்பல் கிளம்பியது. அவ்வேளையில், ஃபுஜைரா துறைமுகத்தின் எண்ணெய் முனையம் தாக்கப்பட்டாலும், கப்பலுக்கும் அதில் இருந்த இந்திய ஊழியர்களுக்கும் எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை என்பது உறுதியானது.

வளைகுடா நாடுகளில் நிலவும் போர்ச்சூழல் காரணமாக உலகளவில் கச்சா எண்ணெய் போக்குவரத்தின் முக்கிய வழித்தடமான ஹோர்முஸ் நீரிணையை ஈரான் முடக்கியுள்ளது. இதனால் 28 இந்திய சரக்குக் கப்பல்கள் அப்பகுதியில் சிக்கின.

இந்திய அரசு ஈரானுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டதைத் தொடர்ந்து, ஹோர்முஸ் நீரிணை வழியாக ஒவ்வொரு கப்பலாக இந்தியா வந்தடைந்து கொண்டுள்ளது. ஷிவாலிக், நந்தாதேவி ஆகிய இரண்டு கப்பல்களைத் தொடர்ந்து, மூன்றாவதாக, ஜக் லாட்கி கப்பல் குஜராத் வந்தடைந்துள்ளது.

இதன்மூலம் இந்தியாவில் நிலவும் எரிவாயுக் கலன் தட்டுப்பாடு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்கா, இஸ்ரேலை ஆதரிக்காத, சரக்குகளை ஏற்றிச் செல்லும் வணிகக் கப்பல்களை ஹோர்முஸ் நீரிணை ஊடாகச் செல்ல ஈரான் தொடர்ந்து அனுமதித்து வருகிறது. அனைத்துலகக் கப்பல் போக்குவரத்தைக் கண்காணிக்கும் ‘ஷிப் டிராக்கர்’ நிறுவனத்தின் தரவுகள் இதை உறுதிப்படுத்தியுள்ளன.

குறிப்புச் சொற்கள்