சிக்கிம்: 16 பனிப் பாறைகளில் எச்சரிக்கைக் கருவிகள்

சிக்கிம்: 16 பனிப் பாறைகளில் எச்சரிக்கைக் கருவிகள்

1 mins read
02e4f4b4-82d0-42fa-887d-437298d69f8e
நேப்பாளத்தில் பனிப்பாறை வெடிப்பால் பேரழிவு ஏற்பட்டது. - படம்: ஏஎஃப்பி
Google News Preferred Icon

கேங்டாக்: நேப்பாளத்தில் பனிப்பாறை வெடிப்பால் பேரழிவு ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தில் உள்ள 16 ஆபத்தான பனிப்பாறைகளில் எச்சரிக்கைக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து சிக்கிம் மாநில பேரிடர் நிவாரண ஆணையர் ரின்சிங் செவாங் செய்தியாளர்களிடம் பேசினார்.

“நேப்பாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளப் பேரழிவைத் தொடர்ந்து ஏரிகள் தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. அவற்றின் நீர்மட்ட மாற்றங்களைக் கண்டறிய தானியங்கி எச்சரிக்கைக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன,” என்று அவர் கூறினார்.

சிக்கிம் மாநிலத்தைப் பொறுத்தவரை சிறியதும் பெரியதுமாக 400க்கும் மேற்பட்ட பனிப்பாறை ஏரிகள் உள்ளன. தீவிர ஆய்வின் அடிப்படையில், 16 பனிப்பாறைகள் கொண்ட ஏரிகள் மிகவும் ஆபத்தான நிலப்பகுதியில் உள்ளவை என அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதில் 13 ஏரிகள் வட சிக்கிமிலும், மற்ற 3 ஏரிகள் மேற்கு சிக்கிமிலும் அமைந்துள்ளன.

இந்த ஏரிகளில் நீரின் அளவைக் கண்காணிக்கத் தொடர் கண்காணிப்பு அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளன.

பெரும்பாலான இடங்கள் வட சிக்கிமில் உள்ளதால், அங்கு நீர்மட்டம் உயர்வதை உடனடியாகத் தெரிந்துகொள்ளும் வகையில் எச்சரிக்கைக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்